மத்திய அரசின் சலுகைகள் கடைக்கோடி மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யுங்கள்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலுள்ள பாஜக. தொண்டர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். இந்தாண்டு நிறுவனநாள் மிகவும் முக்கியமானது. அதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.

முதலாவது, 75-வது சுதந்திர ஆண்டுக்கொண்டாட்டம், இரண்டாவது, வேகமாக மாறிவரும் உலகளாவிய நிலைமையில் இந்தியாவுக்கு தொடர்ந்து புதியவாய்ப்புகள் வருகின்றன.

மூன்றாவதாக இந்தாண்டு நடைபெற்றதேர்தலில் மேலும் 4 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளோம். மேலும், 30 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவையில் நமது கட்சியின் எண்ணிக்கை 100-ஐ தொட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் 180 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தபட்டுள்ளன. உலகம் முழுவதும் இக்கட்டான சூழலை சந்தித்துவரும் நிலையில், இந்தியாவில் 80 கோடி ஏழைகளுக்கு இலவசரேஷன் வழங்கப்படுகிறது. மக்கள் பசியுடன் தூங்காமல் இருப்பதற்காக மத்தியஅரசு ரூ. 3.5 லட்சம் கோடி செலவழிக்கிறது.

குடும்ப அரசியல்செய்யும் கட்சிகள் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காமல் துரோகம் செய்துள்ளன. பாஜக. மட்டுமே அதற்குமாற்றாக செயல்பட்டு வருகின்றது.

மத்திய அரசின் சலுகைகள் கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும்.

இன்று முதல் சமூகநீதி பிரசாரம் தொடங்க உள்ளது. இந்த பிரச்சாரத்தில் நீங்கள் அனைவரும் தீவிரமாக பங்கேற்குமாறு கேட்டுகொள்கிறேன். ஏழைகளுக்காக அரசு செயல்படுத்திவரும் திட்டங்களை நாட்டுமக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

ஒருதொண்டன் என்ற முறையில் கட்சி என்ன கட்டளையிடுகிறதோ, நானும் ஒரு தொண்டனாக என்னால் முடிந்ததைச் செய்வேன். உங்கள் தொண்டராக உங்களிடமிருந்தும் அதையே எதிர் பார்க்கிறேன்

பா.ஜ.,வின் நிறுவன தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது:

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமைச்சரவையில் மிஸ்ஸான தலைவர்க ...

அமைச்சரவையில் மிஸ்ஸான தலைவர்கள் மோடி தலைமையிலான 3.o அமைச்சரவை பதவியேற்கும் நிலையில், இதில் ...

நரேந்திரமோடி பிரதமராக 3-வது முற ...

நரேந்திரமோடி பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் பிரதமர் நரேந்திரமோடி நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

மருத்துவ செய்திகள்

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...