தமிழகம், மே.வங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதானவரி குறைக்க படவில்லை என பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.
அனைத்து முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பெட்ரோல், டீசல்மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. ஆனால், தமிழகம், மேற்குவங்கம், தெலுங்கானா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வரி குறைக்கப் படவில்லை. இங்கு வரி அதிகமாக உள்ளது.
இது அங்குள்ள மக்களுக்கு இழைக்கப் படும் அநீதி. இதனால், அம்மாநில மக்கள் அவதியடைந்து வருகின்றனர். தேசியநலன் கருதி வரியை குறைக்கவேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
முன்னதாக, கோவிட் பரவல் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் நடந்தஆலோசனை கூட்டத்தின் போது பிரதமர் மோடி பேசிய தாவது: கோவிட் அச்சுறுத்தல் முழுமையாக நீங்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது. நாம் இன்னும் விழிப்புடன் செயல்பட வேண்டும். வயது வந்தோரில் 96 சதவீதம்பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டது, குறித்து ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை அளித்துவருகிறோம்.
பொது இடங்களில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதை இன்னும் ஊக்கப்படுத்த வேண்டும். மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகளில் பணியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பை அதிகப்படுத்துவது முக்கியம். மத்திய மாநில அரசுகளின் கூட்டுமுயற்சியால் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |