நீட் சமூக நீதிக்கு எங்கே பாதிப்பு

நீட் தேர்வினால் சமூக நீதி பாதிக்கப்படுவதாக தி மு க உள்ளிட்ட கட்சிகள் பொங்கி எழுகின்றன. கடந்த ஆண்டு, தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம் பி பி எஸ் அனுமதியில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய இடங்களுக்கு, வகுப்பு வாரியாக ஒதுக்கப்பட்ட இடங்கள் மற்றும் கிடைத்த இடங்கள் குறித்த புள்ளி விவரம் இவர்களின் கோரிக்கை தவறானது என்பதை தெளிவாக்குகிறது.

எஸ்.டி வகுப்பினருக்கு (ST) ஒதுக்கப்பட்ட இடங்கள் 29 (1%) கிடைத்த இடங்கள் 29(1%),

எஸ்.சி அருந்ததியினருக்கு (SCA) ஒதுக்கப்பட்ட இடங்கள் 84 (3%), கிடைத்த இடங்கள் 85(3%),

எஸ்.சி (SC) சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 421(15%) கிடைத்த இடங்கள் 431(15.4%),

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (MBC) ஒதுக்கப்பட்ட இடங்கள் 560 (20%) கிடைத்த இடங்கள் 694 (24.8%),

பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியருக்கு (BCM) ஒதுக்கப்பட்ட இடங்கள் 84 (3%) கிடைத்த இடங்கள் 119 (4.2%),

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (BC) ஒதுக்கப்பட்ட இடங்கள் 757 (27%) கிடைத்த இடங்கள் 1340 (47.8%),

இதர வகுப்பினருக்கு (OC) ஒதுக்கப்பட்ட இடங்கள் 869 (31%) கிடைத்த இடங்கள் 107(3.8%).

இந்த புள்ளி விவரங்கள் மிக தெளிவாக உண்மை நிலையை எடுத்துரைக்கிறது. இதில் எந்த இடத்திலும் சமூக நீதிக்கு பங்கம் இல்லை என்பதோடு, நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 31 % விழுக்காடு

ஒதுக்கப்பட்டுள்ள இதர வகுப்பினருக்கு(OC) 3.8 % இடங்களே கிடைத்துள்ளன . அதிகமாக பலனடைந்துள்ளது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிறப்படுத்தப்பட்ட மாணவர்களே. இதில் எங்கிருந்து சமூக நீதி பாதிக்கப்படுகிறது என்பதை விளக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.

இந்த வருடமும் மதிப்பெண்கள் அடிப்படையில் பார்க்கும் போது, இதே நிலை தான் தொடரும் என தெரிகிறது. ஆகவே புலம்புவதை விட்டு கல்வி தரத்தை உயர்த்த தமிழக அரசு முயற்சி செய்வதே சிறப்பை தரும். உண்மைக்கு புறம்பான தகவல்களை, அறிக்கைகளை வெளியிட்டு மக்களை, மாணவர்களை குழப்புவதை நிறுத்தி கொண்டு கல்வி வியாபாரிகளுக்கு ஆதரவாக மலிவு அரசியல் செய்வதை கைவிட வேண்டும். மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது நலன் தரும்.

நன்றி நாராயணன் திருப்பதி.

பாஜக மாநில செய்தி தொடர்பாளர் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...