கொரோனா காலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சி பல்வேறுதவறுகளை செய்ததாகவும், அதனை காங்., அரசியல் ஆக்கியதோடு, அனைத்து எல்லைகளையும் மீறியதாகவும், நாட்டுக்கு எதிராக வேலைசெய்ததாகவும் லோக்சபாவில் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.,7) பதிலுரை நிகழ்த்தினார். அவர் ஆற்றியஉரை: ஜனாதிபதி உரை மீது விவாதங்களை முன்வைத்த உறுப்பினர்களுக்கு நன்றி. கோவிட்டுக்கு பிறகு, இந்தியா முன்னேற்றபாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்கவேண்டும். முழு அர்ப்பணிப்புடன் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல வேண்டும். ஏழைகளுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டித்தரப் படுகிறது. இதனால் ஏழைகள் லட்சாதிபதிகள் போன்று உணர்கின்றனர். இதற்காக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சுதந்திரம் பெற்று பலஆண்டுகளுக்கு பிறகு ஏழைகளின் வீடுகளில் மின்சாரத்தை பார்க்கிறோம். ஏழைகளுக்கு சுத்தமான குடிநீர், காஸ்இணைப்புகள் வழங்கப்படுகிறது. சேவைகளை வழங்குவதில் நேரடி மானியத்திட்டம் பெரும் உதவியாக உள்ளது. ஏழைகளுக்கும் வங்கி கணக்கு வசதி கிடைக்க பெற்றுள்ளது. 50 ஆண்டுகளாக நீங்களும் (காங்கிரஸ்) நாங்கள் இப்போது இருந்தஇடத்தில் இருந்துள்ளீர்கள். என்ன செய்தீர்கள்? பா.ஜ., ஆட்சிக்கு வந்தபிறகு ஏற்பட்ட மாற்றத்தை சிலர் பார்க்க மறுக்கின்றனர்.
24 ஆண்டுகளுக்கு முன்பு நாகாலாந்து மக்கள் காங்கிரசுக்கு ஓட்டளித்தனர். கோவாவில் 28 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றமுடியவில்லை. 1967க்கு பிறகு தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கவில்லை. தெலுங்கானா உருவாக்கப்பட்டதில் இருந்து உங்களை (காங்.,) ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை. உத்தரபிரதேசம், பீஹார், குஜராத் போன்ற பல மாநிலங்களும் காங்கிரசை புறந்தள்ளியுள்ளனர். நேர்மையானவர்கள் யார், சேவைசெய்பவர்கள் யார் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். மிகப்பழமையான காங்கிரஸ் கட்சி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இன்று ஆட்சியில் இல்லை.
எதிர்க்கட்சிகள் பார்லியை சுய நலத்துக்காக பயன்படுத்துகின்றன. பலமுறை தோல்வியை சந்தித்தபிறகும், தோல்வி குறித்து காங்கிரஸ் கவலைப்படவில்லை. புதிய லட்சியங்களை நாம் உருவாக்கவேண்டும். வேற்றுமையில் ஒற்றுமையை காணகூடிய அமைப்பில் நாம் இருக்கிறோம். கண்மூடித்தனமான விமர்சனங்களை முன்வைக்ககூடாது. கொரோனாவுக்கு எதிராக இந்தியா எடுத்த நடவடிக்கைகளை உலகநாடுகள் பாராட்டி வருகிறது. 95 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு முதல்டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 80 சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா காலக்கட்டத்தில் காங்கிரஸ்கட்சி பல்வேறு தவறுகளை செய்தது. கொரோனா பெருந்தொற்றை காங்., அரசியல் ஆக்கியதோடு, அனைத்து எல்லைகளையும் மீறியது. அவர்களின் செயலால் முழுடும் பாதிக்கப்பட்டது. அக்கட்சி நாட்டுக்கு எதிராக வேலைசெய்தது என்பதை வெளிப்படையாக சொல்கிறேன். காந்தியின் கனவுகளை நனவாக்க தொடர்ந்து பாடுபட்டு கொண்டிருக்கிறோம். இத்தனை ஆண்டுகளாக ஆட்சிசெய்தும் தற்போது மக்கள் அங்கீகரிக்கிறார்களா என காங்., சிந்திக்கவேண்டும்.
ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. நீங்கள் என்னை எதிர்க்கலாம். ஆனால், அடுத்த 100 ஆண்டுகளுக்கு ஆட்சிக்குவர முடியாது என்பதை காங்கிரஸ் தீர்மானித்து விட்டதாக நினைக்கிறேன். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உலகமே ஆச்சரியத்துடன் பார்க்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் இப்படிப்பட்ட வளர்ச்சியை யாரும் கண்டதில்லை. எந்த ஒருஇந்தியரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய 80 கோடி ரூபாய் செலவில் இலவசரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. பசியினால் ஒருவர் கூட இறக்க இந்த நாடு அனுமதிக்காது.
இதுவரை இல்லாதளவுக்கு இன்று இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் புதியஉச்சத்தை பெற்று வருகின்றன. குறிப்பிட்ட பகுதிமக்கள் இன்னும் நவீன காலத்திற்குள் வரவில்லை. சிறு விவசாயிகள் வலிமைபெற வேண்டும். 20ம் நூற்றாண்டில் கொண்டுவந்த சட்டங்கள் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லாது. நாட்டின் வளர்ச்சிக்கான புதிய வழிமுறைகளை உருவாக்கி உள்ளோம். உ.பி., மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. 3 தலைமுறையாக அரண்மனையில் வாழ்ந்தவர்களால் விவசாயிகளின் பிரச்னைகளை புரிந்துகொள்ள முடியாது.
கிராமங்களையும், நகரங்களையும் இணைக்க சாலைவசதிகளை மேம்படுத்தி உள்ளோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். கொரோனா காலத்திலும் 3 லட்சம்கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இவ்வாறு அவர் உரையாற்றினார்.
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |