நமது இளம்தலைமுறைதான் நாட்டின் எதிர்கால தலைவர்கள்

மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறையின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து இணைய கருத்தரங்கு நடைபெற்றது. இந்தகல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்பான இணைய கருத்தரங்கில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார்.

அதில் அவர் பேசியதாவது:-நமது இளம்தலைமுறைதான் நாட்டின் எதிர்கால தலைவர்கள். எனவே இன்றைய இளம்தலைமுறையை மேம்படுத்துவது என்பது இந்தியாவின் எதிர் காலத்தை மேம்படுத்துவதாகும்.2022 யூனியன் பட்ஜெட்டில் கல்வித் துறை தொடர்பான 5 விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

*முதலாவதாக, தரமான கல்வியை உலகமயமாக்கல்,
*இரண்டாவது, திறன்மேம்பாடு,
*மூன்றாவது, நகர்ப்புறதிட்டமிடல் மற்றும் வடிவமைப்பு
*நான்காவது, சர்வதேசமயமாக்கல்- இந்தியாவில் உலகத்தரம்வாய்ந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் உருவாக்குதல்
*ஐந்தாவது, விஷுவல் அனிமேஷன் தொழில்நுட்பம் சார்ந்த விளையாட்டுகள்(ஏ வி ஜி சி)

தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த இந்த பட்ஜெட் உதவும். தேசிய டிஜிட்டல் பல்கலைக்கழகம் என்பது ஒருமுன்னோடி திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம், கல்விபயில மாணவர்களுக்கு எண்ணற்ற இடங்கள் இருக்கும். இதனால் பல்கலைக்கழகங்களில் இருக்கை பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

விரைவில் டிஜிட்டல் (யூ என் ஐ) பரிவர்த்தனை தொடங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு அனைத்து பங்குதாரர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...