மேலும் மேலும் எங்களை வழிகாட்டி செல்லுங்கள் ஐயா.

மதுரை ஆதீனம் பாஜகவை வெளிப்படையாக ஆதரிப்பது தவறு, ஒருஆதீனம் என்கிற வகையில் அவர் யுக்தி ரீதியாக அல்லது முதிர்ச்சியுடன் நடந்திருக்க வேண்டும் என சிலர் கருத்திடுகிறார்கள். தமிழ்நாட்டில் தேசியவாதமும், இந்துத்துவமும் மிகமந்தமாக பயனிப்பதற்கு இந்த கருத்தியல்தான் காரணம் என்பேன். இப்படிப்பட்ட தற்காப்பு சிந்தனைதான் நம்மை வளரவிடாமல் தடுக்கிறது.

இந்த எண்ணப் போக்கு திராவிட பரப்புரையும் அதன் சர்வாதிகாரமும் நம் மீது திணித்தவை. இந்த அச்ச உணர்வுதான் நம்மை குறுகிகுறுகி குனிய வைத்துள்ளது. மதுரை ஆதீனம் ஒரு அரசியல் கட்சியோடு தன்னை அடையாளப் படுத்திக்கொள்வது தவறு என்கிறார்கள். அதாவது அரசியல் நிலைப்பாடு கூடாதாம். இதற்கு ஆதீனம் அவர்களே பதில் அளித்து இருந்தார். இந்து ஆன்மீக ஸ்தலங்களில் அரசியல்வாதிகள் குறுக்கிடுகையில், அரசியலுக்குள்ளும் ஆன்மீக வாதிகள் குறுக்கிடவே செய்வார்கள்.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மை உள்ள பகுதிகளில், யார் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் ? யார் வெற்றி பெற வேண்டும் என்பதை பாதிரியார்கள்தான் தீர்மானிக்கிறார்கள். அவர்கள் இதனை மிகச் சிறப்பாக திட்டமிட்டு அமல்படுத்துகிறார்கள். அரசியலில் நாம் தலையிடுகிறோமே ? யார் என்ன சொல்வார்கள் என்றெல்லாம் அவர்கள் யோசிப்பதில்லை. திமுகவை வெளிப்படையாகவே பல பாதிரியார்கள் ஆதிரிக்கிறார்கள். ஏன் இப்படி திமுகவை வெளிப்படையாக ஆதிரிக்கிறீர்கள் என எந்த கிறிஸ்தவரும் அவர்களை கேள்வி கேட்பது இல்லை. சர்ச்சுகளில் நடக்கும் கூட்டங்களில் திமுகவுக்கு வாக்களிக்க அவர்கள் சொல்வதும் வாடிக்கையான ஒன்று.

ஒரு ஆன்மீக மடத்தை நிர்வகிப்பவரோ, ஒரு சமயத் தலைவரோ நிச்சயமாக அரசியலில் பங்கு வகிக்க வேண்டும். ஆயிரமாயிரம் வருடங்களாக பாரதத்தில் அதுதான் நடந்தேறி வந்தது. ஆன்மீக பெரியோர்கள்தான் அரசர்களின் அமைச்சர்களாக வழிகாட்டி வந்தனர். இன்னும் சொல்லப் போனால் நடுநிலை என்பதை விட ஒரு கேடு கெட்டத் தனம் வேறில்லை. அதர்மத்திற்கும், தர்மத்திற்கும் நடக்கும் போரில் நடுநிலை என்பதே இல்லை. இதுதான் கீதையின் சாரமும் கூட.

நான் எந்த பக்கமும் சேராமல், எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காமல் ஆன்மீக மடத்தை நடத்திக் கொண்டு, ஒரு சிறு வட்டத்தில் மட்டுமே பயனிப்பேன் என்பவரை விட ஒரு சுயநலவாதி உலகில் யாரும் இல்லை. ஒரு உண்மையான ஆன்மீகவாதி யாருக்குமே அஞ்சுவதில்லை. அஞ்சுபவன் ஆன்மீகவாதியும் இல்லை.

ஆகையால் மதுரை ஆதீனம் ஐயா அவர்களின் நெஞ்சுறமிக்க பேச்சையும், அவரின் திடமான நிலைப்பாட்டினையும் நீங்கள் ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை, அதை சீர்குலைக்காமல் விலகி இருங்கள். இன்றைய மதுரை ஆதீனத்தின் குரல் மேலும் பல மடாதிபதிகளையும், ஆன்மீக பெரியோர்களையும் தட்டி எழுப்பும். இப்படிப்பட்ட நிகழ்வுகள், ஆன்மீகவாதிகளின் எழுச்சிகள், வட மாநிலங்களில் நடந்தேறியதால்தான் இந்து மறுமலர்ச்சி அங்கு ஏற்பட்டது. அந்த வகையில் மதுரை ஆதினம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களுக்கு இரு கரம் கூப்பிய நன்றிகள். மேலும் மேலும் எங்களை வழிகாட்டி செல்லுங்கள் ஐயா.

தேடிச் சோறுநிதந் தின்று, பல சின்னஞ் சிறுகதைகள் பேசி, நரை கூடிக் கிழப்பருவ மெய்தி, கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும், பல வேடிக்கை மனிதரைப் போலே நீங்களும் வீழ்ந்து விடுவீர்கள் என பலர் எதிர்ப்பார்க்கிறார்கள். அது நடக்காது. இது திராவிட பூமி அல்ல, ஆன்மீக பூமி என நீங்கள் குறிப்பிட்டதை பலரும் உணரும் காலம் விரைவில் வரும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பசுமை ஹைட்ரஜன் குறித்த பிரதமரி ...

பசுமை ஹைட்ரஜன் குறித்த பிரதமரின் செய்தி மதிப்பிற்குரிய பிரமுகர்களே,விஞ்ஞானிகளே, புதுமைப் படைப்பாளர்களே, தொழில்துறைத் தலைவர்களே, எனதருமை ...

ப.ஜ.க உறுப்பினர் சேர்க்கை மேட்ட ...

ப.ஜ.க உறுப்பினர் சேர்க்கை மேட்டுப்பாளையத்தில் L.முருகன் தொடங்கிவைத்தார் மேட்டுப்பாளையம்: பா.ஜ.,வின் உறுப்பினர் சேர்க்கை இயக்கமான 'சங்கதன் பர்வா,சதாஸ்யத ...

சைபர் குற்றங்களை தடுத்திட கூடு ...

சைபர் குற்றங்களை தடுத்திட கூடுதல் கமாண்டோக்கள் இலக்கு -அமித் ஷா சைபர் குற்றங்களை தடுத்திட 5 ஆயிரம் சைபர் கமாண்டோக்களை ...

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள ...

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் 'பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி' எனப்படும், விவசாயிகளுக்கு ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் -அமித் ஷா உறுதி ஜம்மு, ''சட்டசபை தேர்தலுக்குப் பின், ஜம்மு - காஷ்மீருக்கு ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களி ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களில் ஜக்தீப் தன்கர் பங்கேற்பு நமது வாழ்வில்குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ஒவ்வொருவரும் ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...