மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக இறுக்க வேண்டும்- அரசியல் பேசும் ஆதினம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ் பெற்ற ஶ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. பல்வேறு சிறப்புகளை உடைய இவ்வாலயத்தில் உபயதாரர்களின் பங்களிப்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக செய்யப்பட்ட வெள்ளி ரதம், வெள்ளோட்டம் துவக்க விழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி தருமபுரம் ஆதீனம் 27வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மதுரை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஆதீனங்கள் கௌரவிக்கப்பட்டனர். அப்போது ஆதீனங்கள் முன்னிலையில் அமைச்சர் சேகர்பாபு பேசினார். அப்போது, “திமுக ஆட்சியில் தான் ஆயிரக்கணக்கான திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் 34 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது என்றால் இது ஆன்மீக ஆட்சி என்று சொல்லாமல் வேறு என்ன ஆட்சி என்று சொல்ல முடியும்.

திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் உள்ள 64 தங்க ரதங்களும், 84 வெள்ளி ரதங்களும் முழுமையாக பழுது நீக்கம் செய்யப்பட்டு பக்தர்களின் நேர்த்திக் கடனுக்கு வீதி உலா வருகிறது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு அறிவிக்கப்பட்ட ஐந்து தங்க ரதங்களில் பெரியபாளையம் திருக்கோயிலில் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் புதிதாக தங்கரதம் செய்யப்பட்டு பக்தர்க‌ளின் நேர்த்திக்கடனுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதையடுத்து, மேடையில் பேசிய மதுரை ஆதீனம், “தமிழகத்தில் ஆன்மீகமும் அரசியலும் ஒன்றாக கலந்து விட்டது. அமைச்சர் பெயர் சேகர்பாபு என்னுடைய பழைய பெயர் பகவதிபாபு. இருவரும் ஏன் சேர்ந்து இருக்கிறோம்? கோயில் நிலங்களுக்கு குத்தகை கொடுக்காமல் டிமிக்கி கொடுக்கிற பாபுக்களுக்கு ஆப்பு அடித்து ஒரே அமுக்காக அமுக்குவதற்காகத்தான்.

ஆன்மீக அரசு என்று அமைச்சர் சொன்னார். ஆதீனங்களை ஒன்று கூட்டிய பெருமை அமைச்சருக்கு உண்டு. சிறப்பான முறையில் கோயில்களுக்கு திருப்பணிகள் செய்து வருகிறார்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று அண்ணா சொன்னதை, சேகர் பாபு செய்து காட்டியுள்ளார்.

மாநில அரசு மத்திய அரசோடு இணக்கமாக டைட்டாக இருக்க வேண்டும். தருமபுரம் ஆதீனத்தில் தேவாரம் சொல்லித் தரப்படுகிறது. ஆதின வித்துவான் தண்டபாணி தேசிகர் கலைஞரின் ஆசி பெற்றவர். கலைஞர் முதல்வர் ஆனவுடன் தண்டபாணி தேசியருக்கு டாக்டர் பட்டம் அளித்தார்.

தருமபுர ஆதீனமும் ஐயா சேகர்பாபுவும் ஒன்று. இதை அறியாதவர்கள் வாயில் மண்ணு . இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும். மேலே நரேந்திர மோடி ஆட்சி வேண்டும். கீழே திமுக ஆட்சி வேண்டும். தமிழை வளர்த்தது ஆதீனங்கள் தான். சம்பிரதாயங்களை பாதுகாத்தது தருமபுரம் ஆதீனம்.

அமைச்சர் சேகர்பாபு உடன் நெருங்கி பேசியதற்கு என்னை திமுககாரன் என்று முத்திரை குத்துகின்றனர். எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவானவன் நான். நல்ல காரியம் யார் செய்தாலும் பாராட்டுவேன். துணை முதலமைச்சர் உதயநிதி வெள்ளப்பெருக்கில் சிறப்பாக பணியாற்றினார்” என்றார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...