அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று ஆர்.எஸ்.எஸ்.சை சரத் பவார் புகழ்ந்தது குறித்து மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் பதிலளித்துள்ளார்.
தனது சித்தாந்தத்திற்காக ஆர்.எஸ்.எஸ்., மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. அது போன்று நாமும் செயல்பட வேண்டும் என்று தேசியவாத காங்.(சரத் பவார் அணி) தலைவர் சரத்பவார் பாராட்டி இருந்தார். அவரது பாராட்டு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந் நிலையில், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று ஆர்.எஸ்.எஸ்.சை சரத் பவார் புகழ்ந்தது குறித்து மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் பதிலளித்து உள்ளார். அவர் மேலும் கூறியதாவது;
ரத்பவார் மிகவும் புத்திசாலி. நாம் உருவாக்கிய சூழல் இப்போது ஒரு நொடியில் மாறி போனது என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும் என்பதால் அப்படி சொல்லி இருக்கலாம். சில சமயம் நாம் நமது போட்டியாளர்களை பாராட்ட வேண்டும். எனவே அவர் அப்படி சொல்லி இருக்கலாம்.
எதுவும் நடக்காது என்று நாம் எதையும் நினைக்கவே கூடாது. எதுவும் நடக்கலாம். இது தான் நடக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. உத்தவ் தாக்கரே அங்கு செல்கிறார், அஜித்பவார் இங்கே வருகிறார். அரசியலில் இது நடக்காது என்று உறுதியாக முடிவெடுத்தால் அரசியல் சூழல் உங்களை எங்கேயோ கொண்டு செல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |