புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.
அலகாபாத் அருங்காட்சிய கத்தில் இருந்த இந்த செங்கோல், முக்கூடலில் வழிபாடு நடத்தியபின், டில்லி கொண்டு வரப்பட்டு, மத்திய கலாசாரத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கபட்டது.
இதையடுத்து, இன்று (மே.,27)ம் தேதி, மத்தியகலாசார அமைச்சகத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது.
பிரதமர் மோடி இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதினம், பிரதமர்மோடியிடம் செங்கோலை வழங்கினார்.
தொடர்ந்து, மதுரைஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரியசுவாமிகள் ஆகியோரிடம், பிரதமர் மோடி ஆசிபெற்றார்.
மதுரை, தருமபுர ஆதீனங்கள்இருவரும், ஆதினங்களின் நினைவு பரிசை வழங்கி, பிரதமருக்கு ஆசிவழங்கினர்.
பிரதமர் மோடி பேசியதாவது:
உங்கள் அனைவரையும் வணங்கி வாழ்த்துகிறேன். நீங்கள் என் இல்லத்துக்கு வந்திருப்பது அதிர்ஷ்டம்.சிவபெருமானின் ஆசீர்வாதத்தால், சிவபக்தர்களை தரிசனம்செய்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நாட்டின் பாரம்பரிய சின்னமான செங்கோல், புதியபாராளுமன்ற கட்டடத்தில் நிறுவப்படுவதில், மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த செங்கோல், நாம் கடமையின் பாதையில் நடக்கவேண்டும், பொது மக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதை, நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.
சுதந்திரத்திற்குப் பிறகு புனிதசெங்கோலுக்கு உரிய மரியாதை கொடுத்து கௌரவமான பதவி கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், இந்தசெங்கோல் ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக வைக்கப்பட்டு இருந்தது.
எங்கள் அரசாங்கம் செங்கோலை ஆனந்த பவனில் இருந்து, வெளியே கொண்டு வந்துள்ளோம்.
இவ்வாறு, அவர் பேசியுள்ளார்.
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |