100 வயது தாண்டிய அன்னை. அவரை, அரசு தனக்களித்த வீட்டில்வைத்துக் கொள்ளாமல், தன்னுடைய சொந்தவீட்டில் தங்க வைக்கிறார் மோடி. மக்கள் சேவையின்போது அரசாங்கப் பணம் ஒன்றையும் தொடுவதில்லை என்ற கறைபடியாத சித்தாந்தம் கொண்டவர்.
இந்தியாவின் ஜனாதிபதியாய் இருந்த பொழுது, தன் சொந்தங்கள் தென் கோடியில்இருந்து தன்னைப் பார்க்க வரும்பொழுதுகூட, தன் சொந்தக் காசு செலவு செய்து ரயில் பயணம் செய்ய வைத்தவர். சொந்தங்கள் இல்லாமல் தனியே ஜனாதிபதி மாளிகையில் வாழ்ந்தவர், அப்துல்கலாம் ஐயா.
கொரோனா காலத்தின் கொடுமையை மக்கள் சந்தித்து கொண்டிருந்கும்பொழுது, தன் தந்தை இறக்கிறார். இந்நேரத்தில் இரண்டுநாட்கள் தந்தையின் இறுதிகாரியத்துக்கு சென்றுவிட்டால் தன்மாநில மக்கள் நிலை தாழ்ந்துபோகும் என்று தன் தந்தையின் இறுதி காரியத்துக் கூட செல்லாமல் மக்கள்பணியில் இருக்கிறார் யோகி ஆதித்யநாத். மேலும் தன் சொந்தசகோதரி ஏதோ கடை வைத்து வியாபாரம் செய்வதாகக் கேள்வி.
இந்த மனிதர்கள் பதவியை சேவையாக நினைக்கும் மாமனிதர்கள். அவர்கள் கொண்ட சித்தாந்தம் அப்படி. இது பாரதத்துக்கு கிடைத்த பொக்கிஷம்.ஆனால் இங்கே, இன்று துபாயில் அரசுசார்பாக கலந்து கொள்வதாகச் சொல்லிக்கொண்டு, மனைவி, மகன், பேரன்1, பேரன்2, மகள், மருமகன், என்று ஒரு குடும்பமே தனி விமானத்தில் சென்றிருக்கிறது. மகள், பேரன், மருமகன் எல்லாம் அரசுசார்பான விழாவில் கலந்து கொள்ள என்ன தகுதி இருக்கிறது?
தமிழக மக்களை மூளைச் சலவை செய்ய உபயோகப்படுத்தப்படும் ஊடகங்கள், இந்த சுயநலத்தைப் புகழ்ந்து “ஆஹா. இன்று முதல் நீ ..” என்று புகழாரம்சூட ஆரம்பித்து விட்டன. இதில் ஒரு அயல்நாட்டு அடிமை “அடுத்த முறை நீங்கள் பிரதமராக வர வேண்டும் என்று வாலை ஆட்டுகிறது. இவர்களுக்கெல்லாம் அடிமைத்தனம் ஒருபோதை. அந்த போதை தரும்சுகம், இவர்கள் விரும்பி சுவைப்பது. இவர்களுக்கு அண்ணாமலை எப்படி பிடிக்கும்!
“தானே தனக்குப் பகைவனும் நட்பும்” என்பதே தமிழரின் நிலை இப்பொழுது
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |