குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் மத்தியஅரசின் திட்டத்துக்கு, கனிமொழி ஸ்டிக்கர் ஒட்டபார்ப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இது தொடர்பாக கூறியிருப்பதாவது;
”தமிழகம் வந்த பிரதமர் குலசேகரப் பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளத்துக்கான அடிக்கல்லை நாட்டியுள்ளார். அதனைதொடர்ந்து, ரோகிணி 6 H 200 சிறிய வகை ராக்கெட்டை திட்டமிட்டபடி இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதுஒவ்வொரு தமிழருக்கும் பெருமைமிகு தருணம்.
ஆனால் இது முன்னாள் முதலமைச்சர் கருணா நிதியின் கனவுதிட்டம் எனவும், மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பதவிவகித்தபோது குலசேகர பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் கொண்டு வருவதற்காக கருணாநிதி கடிதம் எழுதியதாகவும் கூறி திமுக எம்.பி. கனிமொழி மத்திய அரசின் இந்ததிட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டப் பார்க்கிறார்.
இந்தியாவின் முதல் ராக்கெட்தளம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது தமிழகத்தில்தான். மூத்த விண்வெளி ஆய்வு விஞ்ஞானி நம்பி நாராயணன் எழுதிய “ரெடி டு ஃபயர்” என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களை திருமதி கனிமொழிக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
தமிழகத்தில் இடம்கேட்டு வந்த முதுபெரும் விண்வெளி ஆய்வு விஞ்ஞானி விக்ரம் சாராபாயை அப்போதைய திமுக அமைச்சர் மதியழன் எப்படி அவமானப் படுத்தினார் என்பது தெரியவரும். அப்போதைய முதலமைச்சர் அண்ணாதுரை அவர்கள் உடல் நலம் சரியில்லாத நிலையில் திமுகவினர் இஸ்ரோ குழுவினருக்கு ஒத்துழைப்பு அளிக்காதது மட்டுமல்லாமல் விக்ரம் சாராபாயை அவமானப்படுத்தி அனுப்பிய சம்பவம் நாடறிந்த ஒன்று.
ஸ்டிக்கர் ஒட்டுவதைகூட சரியாக செய்ய தெரியாமல் சீனக்கொடி பொருந்திய ராக்கெட் படத்துடன் விளம்பரம் வெளியிடுகிறார்கள் திமுகவினர். தேச பக்தி என்றால் கிலோ என்னவிலை என கேட்கும் திமுகவினரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். பாரதநாட்டின் மீதும் இஸ்ரோவின் சாதனைகளை விடவும் இவர்களுக்கு சீனா மீது பாசம்பொங்குவதில் வியப்பில்லை.
திமுகவினர் மத்திய அமைச்சர்களாக பதவி வகித்தபோது திருமதி கனிமொழி முயற்சி எடுத்து குலசேகர பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தை கொண்டு வந்திருக்கலாமே. ஊழல்செய்து கொள்ளையடிப்பதற்காவே மத்திய அரசில் அமைச்சர்களாக பவனி வந்தவர்களுக்கு தமிழகத்திற்கு திட்டங்களை கொண்டுவருவதில் எப்படி அக்கறை இருக்கும்?
ஆனால் தமிழகத்தில் ராக்கெட்ஏவுதளம் அமைந்தால் இஸ்ரோவின் திட்டங்களை செயல்படுத்த சரியாக இருக்கும் என கனவுகண்ட இந்திய விண்வெளி ஆய்வு திட்டங்களின் நாயகர்களான சதீஷ் தவான் மற்றும் விக்ரம் சாராபாயின் கனவுகளை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி நனவாக்கியுள்ளார்.”
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |