லோக்சபா தேர்தலின்போது அண்ணாமலை அளித்த வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றுவோம் என, கோவை தெற்கு பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கோவையில் இன்றும் (நேற்று) ஒரு வழக்கறிஞர் கொல்லப்பட்டுள்ளார். தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே, அது ரவுடிகளின் ஆட்சியாகவே உள்ளது.
வயநாடு துயரம் போல் தமிழகத்தில் நடந்துவிடக்கூடாது. பசுமைத் தீர்ப்பாயம் போன்ற உயர் நீதி அமைப்புகள் தலையிட்டால் மட்டுமே, தமிழகத்தில் பணிகள் நடக்கின்றன. மலைப்பகுதி பாதுகாப்பு குறித்த சட்டங்களை முறையாக பின்பற்றினாலே, அபாயங்களைத் தவிர்த்து விட முடியும்.
கோவையில் பள்ளிச் சிறார்கள் போதைப்பழக்கத்துக்கு அடிமையாவது அதிர்ச்சி அளிக்கிறது. ஓட்டு எண்ணிக்கை முடிந்த 100வது நாளில், கோவையில் போதைப்பொருள் தடுப்பு அலுவலகம் (என்.சி.பி.,) அமைக்கப்படும் என, வாக்குறுதி கொடுத்திருந்தோம். தேர்தலில் வென்றாலும், தோற்றாலும் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |