ஜனநாயகத்தில் நமது நம்பிக்கை, சுதந்திரம் ஆகியவையும் நம்மை இணைக்கிறது

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் இன்று உரையாற்றுவதை மிகுந்த பெருமையாக கருதுகிறேன்.

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே,

உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தின் அரசியலமைப்புத் தலைவர் என்ற முறையில் ஜமைக்கா நாட்டின் துடிப்பான ஜனநாயக தலைவர்கள் மத்தியில் உரையாற்றுவது மகிழ்ச்சிஅளிக்கிறது.

ஜமைக்கா நாட்டிற்கு பயணிப்பது, அதன்வாழும் கலாச்சாரத்தை அனுபவிப்பது, அந்நாட்டு மக்களை சந்திப்பது ஆகியவற்றை மிகஆவலுடன் எதிர் நோக்கியிருந்தேன்.

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே,

இந்தியர்களுக்கு ஜமைக்கா ஆதரவு அளித்திருப்பதுடன் அவர்களுக்கு கௌரவத்தையும் மரியாதையையும் வழங்கியுள்ளது. இதன்காரணமாக அரசியலில் மட்டுமல்லாமல் வர்த்தகம், இசை, விளையாட்டு, உடை மற்றும் உணவிலும் வளமான இந்தியத் தன்மையைக் காணமுடிகிறது.

இந்திய சமூகத்தினரும், கலாச்சார உறவுகள் மட்டுமே நமது இருநாடுகளை இணைப்பதில்லை, ஜனநாயகத்தில் நமது நம்பிக்கை மற்றும் சுதந்திரம் ஆகியவையும் நம்மை இணைக்கின்றன. அனைத்து குடிமக்களும் சமமாகவே உருவாக்க ப்பட்டார்கள் என்பது ஜமைக்கா நாட்டு அரசியலமைப்பின் மையதூணாகும். எங்கள் முன்னோர்களும் இதேநம்பிக்கையை பகிர்ந்ததுடன், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனிமனித சுதந்திரத்தை பெற்று தந்தார்கள். சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக்கொண்ட நவீன நாட்டை அவர்கள் உருவாக்கினார்கள். அவ்வாறு உருவாக்கிய போது, ‘வேறுபட்ட போதும், ஒரேமக்கள்’ என்ற ஜமைக்காவின் கோஷங்களைப் போலவே ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே,

இந்தியாவில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்காக தம்மையே அர்ப் பணித்து, சமூக அவலங்களை களைந்தார். அரசியலமைப்பில் சமூகமேம்பாட்டிற்கான வசதிகளை அறிமுகப்படுத்தி, ‘இந்திய அரசியலமைப்பின் சிற்பி’ என்று அன்போடு அழைக்கப் பட்டார். கிங்ஸ்டனில் நேற்று நான் திறந்து வைத்த சாலைக்கு டாக்டர் அம்பேத்கர் பெயர்சூட்டிய ஜமைக்கா நாட்டு அரசுக்கு எனதுநன்றி.

கொவிட்-19 நெருக்கடியில் இருந்து உலகம்மீண்டு வரும் வேளையில் மாபெரும் பொருளாதாரங்களுள் மிகவேகமாக இந்தியா வளர்வதாகக் கணிக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்தது முதல் பல்வேறுமுறைகள் வேளாண்மை உற்பத்தியை நாங்கள் பெருக்கியுள்ளதுடன், உணவு தானியங்களின் நிகர ஏற்று மதியாளராகவும் செயல் படுகிறோம். தரமான மருந்துகளையும், தடுப்பூசிகளையும் மலிவான விலைகளில் தயாரிப்பதால் ‘உலகின் மருந்தகமாக’ இந்தியா அழைக்கப் படுகிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் 150 ஜிகாவாட் அளவை இந்தியா கடந்திருப்பதுடன், 2030-ஆம் ஆண்டிற்குள் 450 ஜிகாவாட்திறன் என்ற இலக்கை எட்ட நிர்ணயித்துள்ளது. எங்களது தேசிய கல்விகொள்கை 2020 இன் கீழ் புதிய இந்திய தொழில்நுட்ப கழகங்களை வெளிநாடுகளில் தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ஓர்இந்திய தொழில்நுட்ப கழகத்தை நிறுவ ஜமைக்கா விருப்பம் தெரிவித் திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களே,நமது தூதரக உறவின் 60-வது ஆண்டு நிறை வடைவதை நாம் கொண்டாடும் வேளையில், வளர்ந்துவரும் நமது கூட்டுமுயற்சி, அடிப்படைக் கொள்கைகள் மற்றும் பகிர்ந்துகொள்ளும் மாண்புகளிலிருந்து நாம் எழுச்சியும் ஆற்றலும் பெறுவோம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வர ...

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன் வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மை ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மைப் பணியில் ஈடுபட்ட மோடி காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ...

பேச்சுசுதந்திரம் குறித்து யார ...

பேச்சுசுதந்திரம் குறித்து யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் “கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

மருத்துவ செய்திகள்

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...