நமது பிரதமர்களில் பெரும்பாலானோர் மிகவும் சாதாரண குடும்பங்களை சேர்ந்தவர்களே

பிரதமர்களின் அருங்காட்சி யகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு தமக்கு கிடைத்திருப்பது அதிர்ஷ்டம் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர்களின் செயல்பாடு, அவர்கள் நெற்றிக்கு ஆற்றியபணிகள் குறித்து விலகும் விதமாக அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப் பட்டது. அதனை இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார். பின்பு பேசியபிரதமர் மோடி, ‘பிரதமர்களின் அருங்காட்சியகத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு என்பது எனக்கு கிடைத்திருப்பது அதிர்ஷ்டம் என்று தெரிவித்தார். இந்தியா சுதந்திரம்அடைத்து 75 ஆண்டுகளில் எத்தனையோ பெருமைக்குரிய தருணங்களை கண்டெடுத்தது.

அதுபோல் இந்த அருங்காட்சியகமும் ஒருசிறந்த உத்வேகமாக வந்துள்ளது; சுதந்திர இந்தியாவிற்கு பிறகு உருவான ஒவ்வொரு அரசாங்கமும் நாட்டை இன்று இருக்கும் உயரத்திற்கு கொண்டுசெல்வதில் பங்காற்றியுள்ளது. செங்கோட்டையில் இதுகுறித்து பலமுறை நான் பேசிவருகிறேன். இன்று இந்த அருங்காட்சியகம் ஒவ்வொரு அரசாங்கத்தையும் பகிரப்பட்டு, பாரம்பரியத்தின் வாழும்பிரதிபலிப்பாக மாறியுள்ளது. நாட்டில் ஒவ்வொரு பிரதமரும் அரசியலமைப்பின் ஜனநாயகத்தை நிறைவேற்றுவதில் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்களை நினைவுகூறுவது சுதந்திர இந்தியாவின் பயணத்தை அறிவதாகும்.

இங்குவரும் மக்கள் நாட்டின் முன்னாள் பிரதமர்கள் பங்களிப்பை அறிந்திருப்பார்கள். ஆனால் அவர்களின் பின்னணி, போராட்டம், உருவாக்கம் ஆகியவற்றை இதன்மூலம் அறிவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், நமதுபிரதமர்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் சாதாரண குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பதும் இந்தியர்களாகிய நமக்கு பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப் படுகிறது. தொலைதூர கிராமங்களில் இருந்து வந்தவர்கள், மிகவும் எளிய குடும்பங்களில் இருந்து வந்தவர்கள், விவசாய குடும்பங்களில் இருந்து வந்தவர்கள், பின்பு பிரதமர் பதவியைஅடைந்து, இந்திய ஜனநாயகத்தின் சிறந்த மரபுகள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.

சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள்கூட இந்திய ஜனநாயக அமைப்பில் மிக உயரிய பதவியை அடைய முடியும் என்ற நம்பிக்கையை இந்த அருங்காட்சியகம் நாடு இளைஞர்களுக்கு அளிக்கும்’ என பிரதமர் மோடி பெருமிதமாக கூறினார். மேலும் இந்திய ஜனநாயகத்தின் மகத்தானஅம்சம் தொடர்ந்து காலப்போக்கில் மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு சகாப்தத்திலும் ஒவ்வொரு தலைமுறைகளிலும் ஜனநாயகத்தினை நவீனமாகவும், அதிகரிக்க முயற்சிப்பதாகவும் மோடி குறிப்பிட்டார்.

புதுமைகளை ஏற்கவும், புதியயோசனைகளை ஏற்கவும் ஜனநாயகம் நம்மை ஊக்குவிக்கிறது. அதேபோல் உலகமும் நம்மை உற்றுநோக்கி பார்க்கிறது; இந்தியாவும் ஒவ்வொரு கணமும் புதியகணங்களை எட்டுவதற்கான முயற்சிகளை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...