வடக்கு கொடுத்தது தெற்கு செழித்தது

நமது பாரத தாயின் தவப்புதல்வன் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை தமிழக மண்ணில் வரவேற்றதில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வரவேற்றதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. 31,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்களை தமிழகத்திற்கு வழங்கியதில் நமது மாநில முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களும் மகிழ்திருப்பார் என்று நம்புகிறோம்.

இது தமிழகத்திற்கு நமது பாரத பிரதமர் 2014ஆம் ஆண்டுக்கு பிறகு வழங்கிய பல நலத்திட்டங்களில் ஒரு சிறு பகுதி மட்டுமே என்று சொன்னால் அது மிகையாகாது. நமது பாரத பிரதமர் தமிழர்களின் புகழை உலகம் அறிய செய்தவர் என்பதை அறியாத பேதையாக உலா வருகிறார் நமது தமிழக முதல்வர்.

நேற்று நமது பாரத பிரதமரின் முன்னிலையில் தமிழக முதல்வர் ஆற்றிய உரையில் உள்ள குறையை சுட்டிகாட்ட நாங்கள் கடமை பட்டுளோம்.

முதல்வர் தனது முன்னுரையில் தமிழக வளர்ச்சியானது பொருளாதாரத்தில் மட்டும் அல்ல, சமூக நீதி சிந்தனையையும் ஒருங்கிணைத்த வளர்ச்சி என்று அலங்காரமான மேடை வார்ர்த்தைகளை உச்சரித்தார். ஆனால் உண்மைநிலை நமக்குத்தான் தெரியுமே!, திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன், ஒரு அதிகாரியை அவரது ஜாதியின் பெயரை சொல்லி திட்டியதற்கு, நீங்கள் வழங்கிய வெகுமதி, வெறும், துறை மாற்றம் மட்டுமே. மேலும், முதல்வரின் உறவினர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் TR பாலு, ”நாங்கள் தீண்ட தகதவர்களா?” என்று கேட்டபின்னர் நீங்கள் அவர்கள் மேல் எடுத்த நடவடிக்கை என்ன? என்பதை தமிழக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

உங்கள் தந்தை முன்னால் முதல்வர் கருணாநிதி அவர்கள் திருமாவளவனை நோக்கி நீங்கள் பொது தொகுதிக்கெல்லாம் ஆசை படக்கூடாது என்றாராம். இப்படி சந்தி சிரிக்கிறது உங்கள் வரலாறு. இவற்றையும் நமது முதல்வர் பிரதமர் முன் குறிப்பிட தவறிவிட்டார்.

அங்கீகாரம் இல்லாத சமுதாயத்தை சேர்ந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணன் L.முருகன் அவர்களுக்கு மூன்று துறைகளின் பொறுப்பை கொடுத்து மத்திய இணை அமைச்சராக உயர்த்தியவர் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். இது தான் பாபா சாஹேப் அம்பேத்கர் அவர்கள் கண்ட கனவு. அதை இன்றைய காலகட்டத்தில் நடைமுறை படுத்தியவர் சமூக நீதி காவலர் மோடி அவர்கள்.

பொருளாதார வளர்ச்சியை பற்றி பேசும் நீங்கள், தமிழகம் எதோ 1967ஆம் ஆண்டுக்கு பிறகு தான் வளர்ந்தது என்ற தோற்றத்தை கொடுப்பது தான் திராவிட மாயை. ஐயா காமராஜர் காலத்திற்கு முன்பிலிருந்தே தமிழகத்தில் தொழில் துறை மேலோங்கி இருந்தது. அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற பெருமை காமராஜருக்கே சேரும். திமுக செய்த ஒரே சாதனை, தொழில் வளர்ச்சியை சென்னையில் முடக்கியது மட்டும் தான்.

1952ஆம் ஆண்டு தொடங்கி 1992ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்த சரக்கு சமப்படுத்தல் கொள்கை (Freight Equalisation Policy) தமிழகத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. தமிழகம் போன்ற மாநிலங்களில் உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் நம்மிடம் இல்லை. இதை வடமாநிலங்களில் இருந்து குறைந்த கட்டண செலவில் தமிழகத்தில் இறக்குமதி செய்வதற்கு உபயோகமா இருந்தது இந்த சரக்கு சமப்படுத்தல் கொள்கை. இதனால் இன்று வளர்ந்த மாநிலங்கள் என்று நமது நாட்டில் சொல்லப்படும் அனைத்து மாநிலங்களும் பயன் பெற்றன. ஆனால் மூலப்பொருட்களை உற்பத்தி செய்த மாநிலங்கள் இழப்பை சந்தித்தன.

அவர்கள் அனைவரும் இந்தியா என்பது ஒரு நாடு, அனைவரும் நம் மக்கள், தென் இந்தியா வளர்வதால் அந்நிய நாட்டு அச்சுறுத்தல் இருக்காது என்பதை மனதில் கொண்டே அவர்களுக்கு நேர்ந்த இழப்பை ஏற்று கொண்டனர். இன்று தமிழகத்தின் வளர்ச்சியில் நமது நாட்டின் வடமாநிலங்களில் பங்களிப்பும் இருந்துள்ளது என்பதை நமது தமிழக முதலவர் புரிந்து கொள்ளவேண்டும். அவருடன் இருக்கும் நிதி அமைச்சர், 30 ஆண்டுகள் வெளிநாட்டின் வாழ்ந்து அவர் வேலை செய்த வங்கி திவால் ஆனா பிறகே தமிழகம் வந்ததால், அவருக்கு இந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இன்று தமிழகத்தில் சுமார் 60 லட்ச வேற்று மாநிலத்தவர்கள் பணி செய்து வருகிறார்கள். அவர்களை ஒதுக்கி விட்டு தமிழகத்தில் தொழில் உற்பத்தி வளருமா என்பதை முதல்வர் முதலில் தொழில் முனைவோர்களிடம் பேசி புரிந்து கொள்ளவேண்டும். அவர்களுக்கு இங்கு வாக்குரிமை இல்லாமல் இருக்கலாம் ஆனால் நமது மாநிலத்தின் வளர்ச்சியில் ஒரு சிறு பங்காவது அவர்களுக்கும் உண்டு.

சமீபத்தில் 25,000 கோடி ரூபாய் Iphone உற்பத்திக்கான முதலீட்டை தமிழகத்திற்கு வர வழிவகை செய்தது மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் என்பது முதல்வருக்கு தெரியும். ஆனால் தனது சிந்தையில் உதித்த திட்டம் போல் sticker ஒட்டியது மட்டுமே தான் இந்த அரசின் சாதனை.

நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த ஆண்டு வந்த வெளிநாட்டு முதலீடு தமிழத்தை விட 6 மடங்கு அதிகம். இங்குள்ள திமுகவினர் கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு முதலீடுகள் பறந்து வருகிறது என்ற போலியான தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். திமுகவினரால் KITEX என்ற நிறுவனத்தை சம்மதிக்க வைத்து இங்கு முதலீடு செய்ய முடியவில்லை, இங்கு இருக்கும் தொழில் நிறுவனங்கள் திமுக வளர்த்து விட்ட போராளிகளால் இன்று மூடப்படுமா இல்லை நாளை மூடப்படுமா என்ற நிலையை நோக்கியே நகர்ந்து வருகிறது.

தொழில் வளர்ச்சியை தொடர்ந்து சில புள்ளி விவரங்களை காற்றில் பறக்கவிட்டார் முதல்வர். அதில் மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதி வெறும் 1.21 விழுக்காடு என்றார். மத்திய அரசின் மொத்த வருவாயும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதில்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்வேறு துறைகளுக்கும் ஒவ்வொரு மாநிலங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்களுக்கும் தேவையான செலவினங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது தான் நமது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது, Federal structure என்று மணிக்கு முன்னூறு தடவை சொல்லும் திமுகவினர் எப்போதாவது அரசியல் அமைப்பு சட்டத்தை படிக்கணும்.

அவர் சொன்ன 1.21 விழுக்காடும் தவறு. 2021-22ஆம் மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்கிய நிதி 7.4 லட்ச கோடி ரூபாய், தமிழகத்திற்கு மத்திய அரசிலிருந்து பகிரப்பட்ட நிதி 70,189 கோடி ரூபாய் ஆகும். அதாவது 9.4 விழுக்காடு; அது மட்டும் அல்லாது 2009-14 ஆண்டுகளில் திமுக அங்கம் வகித்த முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதி 62,615 கோடி ருபாய். அதே 2014-19 வரை பாஜக தலைமையில் உள்ள மத்திய அரசு வழங்கிய நிதி 1,19,455 கோடி ரூபாய்.

பாரதமாலா மற்றும் சாகர்மலா திட்டத்திற்கு மட்டும் தமிழகத்திற்கு மத்திய அரசு செய்த செலவீனம் 2.05 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல். இதை வருவாய் இழப்பு என்று திமுகவினரால் மட்டுமே சொல்ல முடியும்.

கோவிட் காலகட்டத்தில் மாநிலங்களின் நிதி சுமையை குறைக்க 2020-21 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு ₹2.78 லட்சம் கோடி இழப்பீடு விடுவிக்கப்பட்டது, மேலும் அந்த ஆண்டிற்கான எந்த தொகையும் நிலுவையில் இல்லை. இதுவரை மாநிலங்களுக்கு ₹7.35 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது, தற்போது, 2021-22 ஆம் ஆண்டிற்கு மட்டும், நிதியில் போதுமான இருப்பு இல்லாததால், ₹78,704 கோடி இழப்பீடு நிலுவையில் உள்ளது. இது நான்கு மாத இழப்பீடு மட்டுமே ஆகும்.

பொதுவாக, ஒரு நிதியாண்டின் ஏப்ரல்-ஜனவரி பத்து மாதங்களுக்கான இழப்பீடு அந்த ஆண்டில் வெளியிடப்படும் மற்றும் பிப்ரவரி-மார்ச் இழப்பீடு அடுத்த நிதியாண்டில் மட்டுமே வெளியிடப்படும். 2021-22 ஆம் ஆண்டின் பத்து மாதங்களில் எட்டு மாதங்களுக்கான இழப்பீடு ஏற்கனவே மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. செஸ் தொகையானது இழப்பீட்டு நிதியில் சேரும்போது நிலுவையில் உள்ள தொகையும் விடுவிக்கப்படும்.
இவர்கள் சட்டப்பேரவையில் வாசித்த நிதிநிலை அறிக்கையில் சுமார் 6500 கோடி ரூபாய் மட்டுமே GST நிலுவை என்று குறிப்பிட்டிருந்தார்கள். நேற்று 14,006 கோடி என்கிறார்கள். எந்த மாதத்திற்கான இழப்பீடு இது? முதல்வர் எதை கொடுத்தாலும் வாசிப்பதா? விசாரிக்க மாடீர்களா?

மத்திய அரசு மின் உற்பத்தி நிறுவனுங்களுக்கு மற்றும் மற்ற நிறுவனங்களுக்கு தமிழக அரசு வைத்திருக்கும் நிலுவை தொகை 25,925 கோடி ரூபாய்.
தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தமிழக அரசு மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வைப்பு தொகை மட்டும் 10,000 கோடி ரூபாய்.

நேற்று மேடையில் பாரத பிரதமர் தமிழக முதல்வர் இந்த தொகையை விரைவில் திருப்பி செலுத்த வேண்டும் என்று சொல்லியிருந்தால் எப்படி இருந்துருக்கும்? ஆனால் அவரோ தமிழ் மண்ணையும் தமிழ் மக்களையும் நேசிக்கும் ஒரு மாபெரும் தலைவர், அதனால் தான் பெருந்தன்மையுடன் ஒரு தலைவராக அவர் நடந்து கொண்டார்.

அடுத்ததாக கட்ச தீவை திருப்பி பெறவேண்டும் என்றிருந்தார் முதல்வர். கச்சத்தீவு என்ற வார்த்தையை உச்சரிக்க கூட திமுகவுக்கு தகுதி கிடையாது. இவர்களும் இவர்களது கூட்டு களவாணியான காங்கிரஸ் கட்சியும் 1974ஆம் ஆண்டு கச்சத்தீவை தாரைவார்த்து விட்டு இன்று கபட நாடகம் போடுகிறார்கள்.

இலங்கையில் வாழும் தமிழர்களின் விரோதி இந்த திமுக. தமிழின துரோகி இந்த திமுக. பட்ட காயம் ஆற ஒரு மருத்துவர் போல் செயல் பட்டு கொண்டிருக்கார் நமது பாரத பிரதமர் மோடி அவர்கள். 31 பில்லியன் இலங்கை ரூபாய் செலவு செய்து ஈழ மற்றும் மலையக தமிழர்களுக்கு வீடுகளை கட்டி தந்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார் நமது பிரதமர்.

யாழ்ப்பாணத்தில் விமான நிலையம், காங்கேசன்துறையில் துறைமுகம் மற்றும் அவர்களுது கல்வி மேம்பட செலவு செய்து வருகிறது நமது இந்திய அரசு. அவளோ பாசம் இருந்தால் முதல்வர் ஒரு முறை இலங்கை செல்லட்டும், ஈழ தமிழர்கள் காத்திருக்கிறார்கள்.
கச்சத்தீவு மீட்பு என்பது எதோ கடலோரம் சென்று கருவாடு வாங்குவது போல் சுலபம் என்று நினைத்து கொண்டிருக்கும் முதல்வரை என்ன சொல்வது. திமுக இதை பற்றி கவலை பட வேண்டாம். நமது பாரத பிரதமர் பார்த்து கொள்வர். 2017ஆம் ஆண்டு தூக்குக்கு காத்திருந்தவர்களை சிறையிலிருந்து மீட்டு வந்தார் நமது பிரதமர். உங்களிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்திருந்தால் மரீனா கடற்கரையில் இரண்டு மணி நேர உண்ணாவிரதம் இருந்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றிருப்பீர்கள்.

இன்று இலங்கையில் நிலவும் பொருளாதார சிக்கலிலிருந்து அவர்களை மீட்க உதவி கரம் நீட்டிய ஒரே நபர் பாரத பிரதமர் மோடி என்பதை முதல்வர் நினைவில் வைத்து கொண்டு பேசியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

திமுகவின் பழைய அருந்த ரீல் தமிழ் மொழி பாதுகாப்பு. சரி நீங்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு என்ன? வராத ரயில் பதவியில் தலையை வைத்து தூங்கியதை தவிர்த்து. தேசிய கல்வி கொள்கையில் அவரவர் தாய் மொழிக்கே முக்கியம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் முன்னால் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரமிடம் இதே கேள்வியை கேட்க வேண்டும். ஹிந்தி தான் அலுவல் மொழி என்று அவர் அனுப்பிய சுற்றறிக்கையை உங்களுக்கு அனுப்பி வைக்க தமிழக பாரதிய ஜனதா கட்சி கடமை பட்டுள்ளது.

உலகம் எங்கும் தமிழ் மொழியை எடுத்து சென்ற ஒரே பிரதமர் நமது மோடி அவர்கள். அதை பற்றி நீங்கள் என்றாவது பாராட்டியதுண்டா? உங்கள் அரசியல் பிழைப்பிற்காக மக்களை திசை திரும்புவதை தவிர நீங்கள் செய்த சாதனை என்ன?

நீட் தேர்வு ரத்து என்பது நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதி. அது நிறைவேறாது. ஏன் என்பதற்கு காரணமும் உங்களுக்கு தெரியும். அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்ட ஒரு தேர்வு முறையை ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பது சாத்தியமற்றது. அது மட்டுமின்றி முன்னாள் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியது போல, இப்போது உங்களால் தனியார் பொறியியல் கல்லூரிகளிடமிருந்து வசூல் செய்ய முடியவில்லை.
கடந்த ஆண்டு நீட் தேர்வில் 59 சதவீத மாணவர்கள் பணம் கொடுத்து பயிற்சி வகுப்புகளில் சேராமல் வெற்றி பெற்றுள்ளார். ஏழை எளிய மக்களின் மருத்துவ கனவு நீட் தேர்வு மூலமாக நனவாகியுள்ளது. மருத்துவ படிப்பு கோபாலபுரத்தாருக்கு மட்டுமே என்று எதாவது விதி உள்ளதா.

அப்படியே உங்களுக்கு நீட் தேர்வு விளக்கு வேண்டுமென்றால் ஓயாமல் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் வில்சன் மற்றும் RS பாரதியை உச்ச நீதி மன்றத்தில் வழக்கு போடச்சொல்லுங்கள். அப்படி போட்டால் ஒரே நாளில் உங்க ஒட்டு மொத்த நாடகமும் வெளிச்சத்துக்கு வந்து விடும்.

நீங்கள் கடந்த ஓர் ஆண்டு சாதனை என்று பிரதமர் முன் கூறியர்களாம். நீங்க மறந்ததை நாங்கள் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

முன்னாள் பாரத பிரதமர் திரு ராஜிவ் காந்தி அவர்களின் கொலை குற்றவாளியை கட்டி பிடித்து அன்பு பரிமாறியது.

விருதுநகர், வேலூர், தஞ்சாவூரை தொடர்ந்து ரமந்தபுரத்திலும் நடந்த கூட்டு பாலியல் பலாத்காரம். விருதுநகரில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒரு திமுகக்காரன் என்பது வெட்கக்கேடானது.

இதுவரை ஐந்திற்கும் மேற்பட்டோர் லாக்க சித்திரவதையால் உயிர் இழந்துள்ளனர்.
எங்கள் கட்சி பிரமுகர் உட்பட பலரை நடு ரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

வீடுகள் உள்ளவர் வீடுகளை இடித்தது, காலியான இடங்களில் உங்கள் மருமகன் பெயரில் பட்டவை போட்டது.

தினமும் சட்டசபையில் அனைத்து அமைச்சர்களை தனது மகனின் புகழை பாட சொல்வது.
சினிமா துறையை ஆட்சிக்கு வந்த நாள் முதல் மொத்த குத்தகை எடுத்தது.

Sweet box ஊழல், பொங்கல் தொகுப்பில் ஊழல், மின்சார துறையில் அனைத்திலும் ஊழல், ரோடு போடாமல் கரூரில் கமிஷன் அடித்தது என்று நீண்டு கொண்டே போகிறது உங்கள் சாதனை.

தானே தலையிட்டு BGR நிறுவனத்திற்கு 4500 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை மீண்டும் வழங்கியது.

இது போல் எதிர் காட்சிகள் குரல் கொடுத்தால் கையோட வெள்ளி தட்டை எடுத்து சென்று சமூக நீதி நாடகம் என்று புகைப்படங்கள் எடுத்து பரப்புவது.

அதை மீறியும் கேள்வி கேட்டால் அவதூறு வழக்கு போட்டு சிறையில் அடைப்பது.
சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், நேற்று நமது பாரத பிரதமர் மோடி ஒரு தலைசிறந்த தலைவரை போல் உரையாடினார், ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் திராவிடம் எனும் வெங்காயத்தின் வெளிப்புற அடுக்கு போல நடந்து கொண்டார்.
இனியாவது முதல்வர் மற்றவர் கைப்பிள்ளையாக இல்லாமல் சுயமாக சிந்தித்து செயல்பட்டு அடுத்த முறை பாரத பிரதமர் சென்னை வருகையில் திமுக தலைவராக இல்லாமல் தமிழக முதல்வராக கலந்து கொள்வார் என்று பாரதிய ஜனதா கட்சி நம்புகிறது.

அடுத்த வாரம் ஆதாரங்களுடன் உங்கள் அரசு செய்து வரும் இரண்டு ஊழல்களை பத்திரிக்கையாளரிடம் வழங்கவுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

நன்றி அண்ணாமலை

பாஜக மாநில தலைவர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...