இந்தியாவின் செயல்திறனை பார்த்து உலகநாடுகள் பாராட்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னௌவில் நடைபெற்றுவரும் உ.பி. முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 3.0 இல் பங்கேற்று ரூ.80 ஆயிரம்கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது: “மற்ற ஜி-20 நாடுகளைவிட வேகமாக வளர்ந்துவரும் நாடாக நாம் இருக்கிறோம். சீர்திருத்தம், செயல் திறன் மற்றும் மாற்றம் என்ற மந்திரத்தை நமதுஅரசு பின்பற்றி வருகிறது” எதிர்காலத்தை நோக்கமாக கொண்ட கொள்கைகள் இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது, “கடந்த எட்டு ஆண்டுகளில், டிஜிட்டல் புரட்சியை வலுப்படுத்த உழைத்துள்ளோம். கொள்கை ஸ்திரத்தன்மையை கொண்டு வந்துள்ளோம், தேவையற்ற சட்டங்களை நீக்கியுள்ளோம்.”.
பாஜகவின் இரட்டை இயந்திரஅரசாங்கம் மாநிலத்தின் வளர்ச்சியை துரிதப் படுத்தியுள்ளது, அடுத்த 25 ஆண்டுகள் ‘அமிர்த காலமாக’ இருக்கும்.
மத்திய அரசின் சீர்த்திருத்தங்கள் மூலம் இந்தியா ஒருவலுவான தேசமாக உருவெடுத்துள்ளது. “ஒரே நாடு; ஒரேவரி; ஒரே ரேஷன் கார்டு” உள்ளிட்டவை அரசின் உறுதியான, தெளிவான கொள்கையின் பிரதிபலிப்பாகும்.
உலகளாவிய சூழ்நிலைகள் புதியவாய்ப்புகளை கொண்டு வருவதாகவும், நம்மிடம் திறன்கள் இருப்பதால் உலகநாடுகளுக்கு இந்தியா நம்பகமான நண்பராக உருவெடுத் துள்ளதாகவும், இந்தியாவின் திறமை மற்றும் செயல்திறனை பார்த்து உலகநாடுகள் பாராட்டுவதாக மோடி கூறினார்.
மேலும்,ஏறக்குறைய 37 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, உத்தரப் பிரதேசத்தில் மக்கள் மீண்டும் ஒருஅரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர், இது யோகி அரசாங்கத்தின் செயல்திறன் குறித்துபேசப்படுவதாக உள்ளது.
கங்கை நதிக்கரையில் ஐந்து கிலோமீட்டர் தூரத்தை இயற்கை வேளாண்மைக்கான தாழ்வாரமாக உருவாக்க அரசு முடிவுசெய்துள்ளதாக பிரதமர் கூறினார்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு உத்தரப்பிரதேசம் உத்வேகம் அளிக்கும், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களின் கனவுகளுக்கு சிறகுகொடுக்கும் திறன் உத்தரப்பிரதேச இளைஞர்களிடம் உள்ளது.”இளைஞர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தால் உங்கள்கனவுகள் நனவாகும்,” .
மேலும், முதலீட்டாளர்கள் விவசாயம் மற்றும் உணவுபதப்படுத்துதல் துறைகளில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்ட பிரதமர், தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு வருகைதருமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்புவிடுத்தார்.
“நீங்கள் காசிக்குச்சென்று, அதன் பாரம்பரியத்தை பாதுகாத்த நகரத்தின் புதிய தோற்றத்தைப் பார்க்கவேண்டும்” என்று மோடி கூறினார்.
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |