விமானப் போக்குவரத்து துறையில் அக்னிபத் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியா அறிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், அதிக திறன்கொண்ட அக்னி வீரர்களுக்கு விமான போக்குவரத்துத்துறை முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாக பணிசெய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யபட்டது. இந்ததிட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” என்று அழைக்கப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இத்திட்டத்திற்கான வயது வரம்பு 17.5 லிருந்து 23-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அக்னிபத் திட்டத்தின்கீழ் அக்னி வீரர்களை தேர்வு செய்ய இரண்டு நாட்களில் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த திட்டத்தின்கீழ் துணை ராணுவத்தில் சேரும் அக்னிபத் வீரர்களுக்கு மத்திய ஆயுதப்படை, அசாம் ரைபிள்ஸ் பிரிவில் 10% இட ஒதுக்கீடுவழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |