திமுக நிலைப்பாடு சமூகநீதியா சந்தர்ப்பவாதமா

பாரதிய ஜனதாகட்சியின் சார்பில், இந்திய வரலாற்றில் முதன் முறையாக ஒரிசா மாநிலத்தின் ஒரு பழங்குடி யினத்தைச் சேர்ந்தவர், அதுவும் ஒருபெண்மணிக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பை பாஜக ஏற்படுத்தி உள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் குடியரசுத் முன்மொழியப்பட்ட சரத்பவார், கோபாலகிருஷ்ண காந்தி, பாரூக் அப்துல்லா ஆகியோர் போட்டியிட மறுத்துவிட்டனர். குடியரசுத்தலைவராகப் போட்டியிடத் தேவையான குறைந்தபட்ச தகுதியுள்ள வேட்பாளரை தேர்வுசெய்ய இயலாமல், நேற்றுவரை பாஜகவில் இருந்த உயர்சாதி இனத்தவரான யஷ்வந்த் சின்ஹாவைத்தான் வேட்பாளராக அறிவிக்க வேண்டிய அவலநிலை எதிர்க் கட்சிகளுக்கு ஏற்பட்டு உள்ளது.

வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, என்று இதுவரை பேசிய திமுக , திருமா, மற்றும் காங்கிரஸ் கட்சியினர் யாரை ஆதரிக்கப் போகின்றனர்.

இந்தியாவில் பத்துக்கோடிப் பேருக்கும் மேல் பழங்குடி இனத்தவர் இருந்தபோதிலும், அவர்களில் ஒருவர் கூட இதுவரை ஜனாதிபதி ஆனதில்லை. பழங்குடி இனத்தைச் சேர்ந்த பி ஏ சங்மாவை பாஜக நிறுத்தியபோது வைதீகரான பிரணாப் முகர்ஜியை நிறுத்தி காங்கிரஸ் கட்சி பழங்குடியினத்தவரான சங்மாவைத் தோற்கடித்தது. கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்த பட்டியலைப்பார்த்தால் தெரியும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான வாய்ய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்பட்டது.

தற்போது பாஜகவின் சார்பில், மீண்டும் ஒரு பழங்குடி இன வேட்பாளர். ஒரிசாமாநிலத்தின் ஒரு பெண்மணியை திருமதி திரௌபதி முர்மு என்பவரை ஜனாதிபதி வேட்பாளராக பாஜக அடையாளப்படுத்தியிருக்கிறது. இம்முறை பாஜகவின் பழங்குடியின வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியான நிலையில், எதிர் அணியின் வேட்பாளர் வெற்றிபெற முடியாது என்பது தெளிவான நிலையில், ஒடுக்கப்பட்ட சமூகத்தின், பழங்குடியினப் பெண் வேட்பாளரை ஒருமனதாகத் தேர்வு செய்து, போட்டியின்றி வெற்றி பெற துணை நிற்க வேண்டாமா?.

ஒரு பழங்குடியின வேட்பாளரை ஜனாதிபதி ஆக்குவதை எதிர்ப்பவர்களா சமூக நீதியின் காப்பாளர்கள். திமுகவும், காங்கிரசும் சமுதாயத்தில் அடிதட்டிலிருந்து மேலே வந்தால் கூட ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் மட்டுமே ஆதரவு தருவார்கள். மற்றவர்கள் எப்போதும் போல தாத்தா காலத்தில் இருந்து வழிவழியாக போஸ்டர் ஒட்டுவதற்கும், அடுத்த தலைவர் வாழ்க என கோஷம் போடவும், அடிமட்ட வேலை செய்ய மட்டுமே இங்கு அனுமதி உண்டு.

கிருத்துவரை முன்னிருத்தினால்தான் ஆதரிப்பேன் என்ற திருமாவின் நிலை மாறிவிட்டதா? இந்திய ஜனதிபதியாக ஒரு பழங்குடியினத்தவர் வருவதை எதிர்த்து, தங்களின் உயர்சாதி வகுப்பினரை போட்டியில் எதிராக நிறுத்தும், திமுக திருமா காங்கிரஸ் கட்சிகளின் சமூக நீதி என்பது வாய்ச்சொல்லில் தான் இருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் இருப்பது சமூகநீதியா சந்தர்ப்பவாதமா என்பதை மக்கள் புரிந்து கொள்ளலாம்.

உயர் சாதி வேட்பாளரை ஆதரித்து, பட்டியலினத்தின் மலையகமகளை மறுக்கும் திமுகவும், திருமாவும், காங்கிரசும், இனி சமூக நீதிக்கும் புதிய மாடல் உருவாக்கப் போகிறார்கள் போலும்.

திமுக எப்போதுமே தமிழுக்கும் தாழ்நிலை மக்களுக்கும் சிறுபான்மை இனத்துக்கும், எதிராகத்தான் செயல்படும், தமிழ் தமிழ் என்பது பேச்சளவில் நின்றுவிடும். இதற்கு முன்னர் இதே குடியரசுத்தலைவர் தேர்தலில், தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆர்.வெங்கட்ராமனுக்கு ஓட்டு போடாமல் கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ணய்யருக்கு ஓட்டு போட்டது அப்புறம் சிறுபான்மைக் காவலராக காட்டிக் கொள்ளும் ஆனால், சிறுபான்மை இனத்தவரான, தமிழரான அப்துல்கலாமுக்கு ஓட்டு போடாமல் லஷ்மி செய்ஹலுக்கு ஓட்டு போட்டது
வழக்கம் போல ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி இன மக்களுக்காக சமூக நீதி என்றெல்லாம் திமுக , திருமா, மற்றும் காங்கிரஸ் கட்சிகள் போடும் பல கோஷம் அதெல்லாம் நிஜமான வேஷம்.

ஒடுக்கபட்ட சமுதாயத்தின் பெண்மணியை இந்தியாவின் மிக உயர்ந்த பொறுப்பில் அமர்த்த முன் வந்த பிரதமர் அவர்களையும், நம் பாஜகாவின் அனைத்திந்தியத் தலைவர்களையும் வணங்கி மகிழ்கிறேன். உண்மையான சமூக நீதி காத்த உத்தமராக, மகளிருக்கு மாண்பு சேர்த்த மனிதருள் மணிக்கமாக, நம் பாரதப் பிரதர் திரு நரேந்திர மோடி அவர்கள் குன்றின் மேல் இட்ட விளக்காக ஒளிவீசுகிறார்.

நன்றி;- அண்ணாமலை
பாஜக மாநில தலைவர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...