”ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் பேசியது, இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அவமதிப்பதற்கு சமம்,” என்று பிரதமர் மோடி பேசினார்.
இன்று பார்லியின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார். அவரது பேச்சு போர் அடிக்கும் வகையில் இருந்ததாகவும், மோசமான விஷயம் என்றும், பிரியங்கா, சோனியா ஆகியோர் கூறினர்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் சர்ச்சைகளுக்கு பதில் கூறாத ஜனாதிபதி மாளிகை கூட, காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளது.
பா.ஜ., தலைவர்கள் பலரும், காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டில்லியில் இன்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
அரச குடும்பத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர், ஜனாதிபதி உரை பற்றி கூறுகையில், பழங்குடியின பெண் ஒருவர் போர் அடிக்கும் உரையை வழங்குவதாக கூறியுள்ளார். அதே குடும்பத்தை சேர்ந்த இன்னொருவர், ஜனாதிபதியின் உரை, மோசமான விஷயம் என்று கூறியுள்ளார். இது, நாட்டில் இருக்கும் 10 கோடி பழங்குடி மக்களுக்கு ஏற்பட்ட அவமானம். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்பட்ட அவமானம்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |