ஓட்டுக்காக இலவசங்களை வழங்கும் கலாசாரம் ஆபத்தானது

வாக்குகளைப் பெறுவதற்காக இலவச பொருள்களை வழங்கும்கலாசாரம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

இலவசப் பொருள்களை குறிப்பதற்காக பிரதமர் வடஇந்தியாவில் பண்டிகை காலங்களில் பரிமாறி கொள்ளப்படும் ரேவடி எனப்படும் ஒருவகை இனிப்பினை அரசியல் கட்சிகளால் கொடுக்கப் படும் இலவச பொருள்களுக்கு உருவகமாகக் கூறினார். ஆட்சியினைப்பிடிக்கும் நோக்கில் இதுபோன்று இலவசங்களை வழங்கும் கட்சிகளிடமிருந்து மக்கள் அனைவரும் கவனமாக இருக்கவேண்டும் எனவும், குறிப்பாக இளைஞர்கள் தங்களை இந்த இலவச கலாசாரத்திலிருந்து பாதுகாத்து கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 296 கிலோ மீட்டர் நீளத்தில் பந்தேல்கண்டில் அமைக்கப் பட்டுள்ள விரைவுச்சாலையை திறந்து வைத்துப்பேசிய பிரதமர் மோடி இதனை தெரிவித்தார். இந்த பந்தேல்கண்ட் விரைவுச் சாலை சுமார் ரூ.14,850 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விரைவுச் சாலையினால் பயண வேகம் மட்டுமின்றி தொழிற்சாலையின் வளர்ச்சியும் உறுதிசெய்யப்படும்.

பந்தேல்கண்ட் விரைவுச்சாலையை திறந்துவைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: “ இந்த புதிய விரைவுச் சாலையின் மூலம் உத்தரப் பிரதேசம் முன்பு சந்தித்துவந்த சாலை இணைப்பு பிரச்னைகள் முடிவுக்குவரும். இந்த புதிய சாலையின் மூலம் பயண நேரம் 3-லிருந்து 4 மணி நேரம் குறையும். உத்தரப்பிரதேசம் இரட்டை என்ஜின் ஆட்சியின் மூலம் பெரிய அளவிலான மாற்றங்களை சந்தித்துவருகிறது. நாட்டின் எதிர்கால வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு திட்டம் மற்றும் முடிவுக்கு பின்னும் நாட்டின் வளர்ச்சியினை அதிகரிப்பதே நோக்கமாக இருக்கவேண்டும். நாட்டிற்கு வளர்ச்சிக்கு தீங்கினைத்தரும் விஷயங்கள் நீக்கப்பட வேண்டும். நாட்டினை வளர்ச்சிபாதையில் கொண்டுசெல்ல நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனை விட்டுவிட கூடாது. இந்த சகாப்தத்திலேயே நாட்டின் வளர்ச்சியினை உறுதிசெய்ய வேண்டும். புதிய இந்தியாவை உருவாக்கவேண்டும். ஆனால், புதிய இந்தியாவிற்கு ஒருசவாலும் உள்ளது. அந்த சவால் இந்த தலைமுறைக்கு தீங்கினைத் தரக்கூடியது. உங்களது நிகழ் காலம் உங்களது எதிர்காலத்தை இருட்டில் தள்ளும் அச்சம் உள்ளது. அதனால், நாம் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும்.

நமது நாட்டில் இன்று வாக்குகளைப் பெறுவதற்காக இலவசங்களை வழங்கும் கலாசாரம் பின்பற்றப் படுகிறது. இந்த இலவசங்கள் வழங்கும் கலாசாரம் இனிப்புகளை வழங்குவதுபோல இருக்கும். ஆனால், நாட்டின் வளர்ச்சிக்கு இந்த இலவசபொருள்கள் வழங்கும் கலாசாரம் மிகவும் ஆபத்தினை ஏற்படுத்தக்கூடியது. இந்த கலாசாரத்திற்கு எதிராக மக்கள் கவனமாக இருக்கவேண்டும். குறிப்பாக, இந்த இலவச பொருள்கள் கலாசாரத்திலிருந்து இளைஞர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

இது போன்று இலவசங்கள் வழங்குபவர்களால் ஒரு போதும் விரைவுச்சாலைகள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தளவாடங்களை ஏற்படுத்த முடியாது. அரசியல் கட்சிகள் இலவசங்களைக் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என நினைக்கிறது. அதனை நாம் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும். அரசியலில் இலவங்கள் வழங்கும் கலாசாரத்தை முழுவதுமாக நீக்கவேண்டும்.

நாங்கள் இலவசங்கள் வழங்கும் கலாசாரத்தைவிடுத்து நாட்டின் வளர்ச்சிக்காக பாலங்கள், விரைவுச்சாலைகள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தளவாடங்கள் அமைத்துவருகிறோம். மக்களின் நலனையும் நாங்கள் பாதுகாத்துவருகிறோம். மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் முயற்சியினையும் தீவிரமாக செயல்படுத்திவருகிறோம். முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியில் உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இதற்கு முன்னதாக மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு மிகவும்மோசமான நிலையில் இருந்தது. மாநிலம் இரட்டை என்ஜின் ஆட்சியின் கீழ் சிறப்பான வளர்ச்சியடைந்துள்ளது” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வளர்ந்த இந்தியாவிற்கான விருப் ...

வளர்ந்த இந்தியாவிற்கான விருப்பங்கள் மற்றும் தீர்வுகளுக்கன அடித்தளம் வளர்ந்த இந்தியாவிற்கான விருப்பங்கள் மற்றும் தீர்வுகளுக்கு வலுவான அடித்தளத்தை ...

மத்திய பட்ஜெட் ஒரு பார்வை

மத்திய பட்ஜெட் ஒரு பார்வை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி கடைசி நபரையும் சென்றடைந்தது முதலீடு மற்றும் கட்டமைப்பு ஆற்றல் மற்றும் வெளிக்கொணர்தல் பசுமை வளர்ச்சி இளைஞர் சக்தி ...

நடுத்தர வர்க்கத்தினருக்கு பயன ...

நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனளிக்கும் பட்ஜெட் நம் நாட்டில் கடினமாக உழைக்கும் நடுத்தர வர்க்கத் தினருக்கு ...

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய் ...

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் ஐந்தாவது படஜெட் மத்திய அரசின் 2023-24-ஆம் நிதியாண்டு க்கான பொதுபட்ஜெட்டை மக்களவையில் ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் என ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற்றவர்களின் பரிசு காலநிலை பாராது பொது மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில், ...

மருத்துவ செய்திகள்

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...