கோவையில் திரண்டது, திமுகவுக்கும், ஆ.ராசாவுக்கும் எதிரான தமிழினத்தின் கொந்தளிப்பு.

தமிழக அரசே, தமிழக அரசே, தூண்டாதே, தூண்டாதே, மதக்கலவரத்தை தூண்டாதே… அஞ்ச மாட்டோம், அஞ்ச மாட்டோம், அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்…. கண்டிக்கின்றோம், கண்டிக்கின்றோம், தமிழக அரசை கண்டிக்கின்றோம்…. துப்பில்ல, துப்பில்ல, ஆபாசபேச்சு ராஜாவை, கைது செய்ய துப்பில்ல… வெட்கக்கேடு, வெட்கக்கேடு, காவல்துறைக்கு வெட்கக்கேடு….. அடிபணியோம், அடிபணியோம், அடக்குமுறைக்கு அடிபணியோம்…. சீண்டாதே, சீண்டாதே, பாஜகவை சீண்டாதே – என்ற கோஷங்கள் விண்ணைப் பிளக்க, கட்டுக்கடங்காத மக்கள், திமுகவின் தொடர் தோல்விகளால் நம்பிக்கை இழந்த மக்கள், தானாக திரண்டுவந்து பாஜகவிற்கு ஆதரவைத் தெரிவித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டம்.

ஒரு மாவட்ட தலைவரின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இதற்கு முன் தமிழகத்தில் இத்தனை பெரிய கூட்டம் கூடியது இல்லை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக, கோவையில், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூடிய கூட்டம் அமைந்துவிட்டது. தன்னுடைய கருத்தை, ஜனநாயக ரீதியில், பேச்சுரிமைக்கு உட்பட்டு, முகத்தில் அடித்தார் போல, உண்மைகளைப் பேசிய மாவட்ட தலைவரின் கைதுக்கு, எதிர்ப்பு தெரிவித்து, இத்தனை பெரிய கூட்டம் இதற்கு முன் கூடியதில்லை. ஒரு மாவட்டத் தலைவர் கைதைக் கண்டித்தே இப்படிக் கூட்டம் என்றால், மாநிலம் முழுவதும் ஆளும்கட்சியின் அதிகார அத்துமீறல் நடைபெறும் என்றால், தமிழகம் அதை தாங்க முடியாது.

கொஞ்சமல்ல, நஞ்சமல்ல கோவை மாநகரே கொந்தளித்தது. இந்தக் கூட்டம் பாசத்தோடு தமிழக மக்கள் பங்களித்தது. பெருகி வந்த மக்கள் பெருக்கம், இந்தக் கோட்டம் பாஜகவின் கோட்டை என்று நிரூபிப்பதாக இருந்தது.
திமுகவின் தவறுகளை, திமுகவின் ஊழல்களை, திமுகவின் அத்துமீறல்களை, திமுகவின் திறமையின்மையை, பாரதிய ஜனதா கட்சியினர், சுட்டிக்காட்டி பாஜகவினர் பேசும்போது, அந்த சொல்லின் உள்ளிருக்கும் சூடான உண்மையை சத்தியத்தை பொறுக்க முடியாமல், பொய் வழக்குப் போட்டு, தேசவாதிகளைக் தமிழக அரசு கைது செய்கிறது, தேசவிரோதங்களுக்குக் கோர்க்கிறது.

‘தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை’ (மரண சாசனம்) என்ற ஒரு புத்தகத்திலிருந்து ஹிந்துக்கள் குறித்து பெரியார் சொன்னதை தான் நான் படித்தேன் என்று ஆ.ராஜா அந்த புத்தகத்திலிருந்து படித்து சொன்னதை நாம் பார்த்தோம். ஆனால், அதே உரையில், அதே புத்தகத்தில், 21ம் பக்கத்தில், அதே பெரியார் சொல்கிறார்…..

“நாதி இல்லையே, சொல்றதுக்கு நாதி இல்லையே, சிந்திக்க நாதி இல்லையே! ஒரு ஓட்டுக்கு என்னென்னெ கொடுக்கிறான்? பொண்டாட்டியை தவிர மற்றதை எல்லாம் கொடுக்கிறானே – ஒட்டு வாங்குவதற்கு. இதற்குக் கவலையே படமாட்டேங்கிறானே. முன்னேற்றக் கழகத்துக்காரன், மற்றவன் எல்லாம் என்னை வைவான்.’

இவனுக்கு ஏன் இதுவெல்லாம் என்ன கேடு, இந்த வேலையை ஏன் பண்ணிக்கிட்டு இருக்கிறான்’ என்று. அவனுக்கு ஓட்டு தான் பெருசு. அவன் பொண்டாட்டி , பிள்ளையைப்பற்றி அவனுக்கு கவலை இல்லை. இன்னும் கொஞ்ச நாள் போனால் வழக்கத்தில் வந்துவிடும். – பொண்டாட்டியைக்கூட கொடுத்து ஓட்டு வாங்குகிறாற்போல். ஏனென்றால் அந்தப் பதவியும் அவ்வளவு உயர்வாய்ப் போச்சு” என்று குறிப்பிட்டுள்ளதை ஆ.ராஜா சொல்ல மறந்தது ஏன்? மறைத்தது ஏன்? அதிலும் ‘முன்னேற்றக் கழகத்துக்காரன்’ என்று ஈ வெ ரா அவர்கள் குறிப்பிட்டது யாரை என்று ஆ.ராஜா விளக்குவாரா? ஆ.ராஜாவின் நடையில் நாம் சொல்ல வேண்டுமென்றால், இதை நான் சொல்லவில்லை, பெரியார் தான் சொன்னார்!

சாதி ரீதியாக, மத ரீதியாக, இன ரீதியாக, வர்க்க ரீதியாக மக்களை பிரித்து அதன் மூலம் குளிர்காயும், இழிவான ஓட்டு அரசியலை திமுக தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறது. ஆளும்கட்சியின் அராஜகத்தை கண்டித்து, காவல்துறையின் கடமை மீறலை கண்டித்து, ஆ.ராசாவின் ஆபாச பேச்சை கண்டித்து, பேச்சுரிமை மறுக்கப்படும் பேதமையை கண்டித்து, பாஜகவினரை துணை அமைப்பினரை கைது செய்ததை கண்டித்து, ஒட்டுமொத்த தமிழினமே ஒன்றாய் திரண்டு வந்தது போல உணர்ச்சிமயமான ஆர்ப்பாட்டம்.
ஆளும் கட்சியின் அடக்குமுறையையும், ஆளும் கட்சியின் ஏவல் துறையாக மாறி இருக்கும் காவல்துறையின் அத்துமீறல்களையும் கண்டு எந்த பாஜக தொண்டனும் அஞ்சப்போவதில்லை.

ஆட்சியாளர்கள் ஒன்றும் கடவுள்கள் இல்லை. தன்னைக் கண்டிக்கவும் தண்டிக்கவும் யாரும் இல்லை என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு வரும்போது, அந்த மாநிலத்தில் இது போன்ற அவலங்கள்தான் அரங்கேறும்.
அதேபோல ஆட்சியாளர்களுக்கு சாமரம் வீசுவது மட்டுமே தங்கள் பணி என்று காவல்துறை நினைத்திருந்தால், அந்த எண்ணத்தையும் அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். மத்திய அரசு உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் எத்தனை நேர்மையாக இருக்கிறீர்கள் என்று கண்காணிக்கப்படுகிறீர்கள்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் நடைபெறத்தான் போகின்றன. அப்போது நடுநிலை தவறிய நேர்மை இல்லாத காவல்துறையினருக்கு நெஞ்சம் பதைக்கப் போகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களின் எதிர்ப்பை தமிழக முதல்வர் கவனித்திருப்பார், இனியேனும் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்வார், நடுநிலையாக, நேர்மையாக, அரசை நடத்துவார், என்று நம்புகிறோம்.

என்றும் தேசப்பணியில்.

(K.அண்ணாமலை)

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...