ஒரு தலைவரின் வாழ்க்கை மிககொடூரமாக துண்டிக்கப்பட்டு இருப்பது வேதனை

தமிழக பகுஜன் சமாஜ்கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை ஒட்டுமொத்த தேசத்தையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். குற்றவாளிகளை விரைந்துதண்டிக்க வேண்டும் என்று நான் தமிழக அரசை வலியுறுத்துகிறென் என்று பாஜக தேசியதலைவரும் மத்திய அமைச்சருமான ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.

தமிழக பகுஜன் சமாஜ்கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52). இவர் நேற்று வீட்டு முன் நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது மர்ம கும்பலினர் 8 பேர் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும்அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணைநடத்தினர். இதில், முதலில் சம்பவம் நடந்த 4 மணிநேரத்திற்குள் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் 8 பேர் சரணடைந்ததாக தகவல் வெளியானது. ஆனால் அவர்கள் 8 பேரும் காவல் நிலையத்தில் வந்து ஆஜராகவில்லை. காவல் துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள்தான் என்று போலீசார் தெரிவித்தனர்.

அந்தவகையில் பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜேபி நட்டாவும் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

தமிழக பகுஜன் சமாஜ்கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை ஒட்டுமொத்த தேசத்தையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். குற்றவாளிகளை விரைந்துதண்டிக்க வேண்டும் என்று நான் தமிழக அரசை வலியுறுத்துகிறென்.

சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினருக்கு அதிகாரமளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தலைவரின் வாழ்க்கை மிககொடூரமாக துண்டிக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது. திமுக மற்றும் காங்கிரஸ் ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களை புறக்கணிக்கிறது என எல்லோராலும் அறியப்பட்டகூற்று ஆம்ஸ்ட்ராங்கின் கொலையின் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இதேவிளிம்பு நிலை சமூகத்தை சேர்ந்தவர்கள்தான். எனவே 24 மணி நேரமும் அற்பஅரசியல் செய்வதை விடுத்து திமுக காங்கிரஸ் கூட்டணி சிறிதளவாவது ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்கள் மீது கருணையும் அக்கறையும் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கல ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் அறிவிப்புக்கு வரவேற்பு முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தட ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம் ''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...