பிரதமர் நரேந்திரமோடி உத்தரகாண்ட் மாநிலம் மானாவில் பனிபிரதேசத்தில் கடல் மட்டத்தில் இருந்து 11,300 அடி உயரத்தில் பூஜ்ஜிய டிகிரி செல்சியஸில் உடலை உறையவைக்கும் குளிரில் எல்லை சாலை அமைப்பினரின் தகர கூடாரத்தில் தங்கி இரவைகழித்தார். அப்போது அவர் கிச்சடியை ருசித்து சாப்பிட்டார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக உத்தராகண்ட் மாநிலம் சென்றார். வெள்ளிக்கிழமை உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் உள்ள இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஜாலி கிராண்ட் விமான நிலையத்தில் பிரதமர் மோடி இறங்கினார்.
இதையடுத்து ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற கேதார்நாத் கோயிலுக்குச் சென்ற பிரதமர்மோடி அங்கு தரிசனம் செய்தார். அப்போது அங்குள்ள மலைவாழ் மக்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் வெள்ளைநிற உடையை பிரதமர் மோடி அணிந்திருந்தார்.
அதன்பிறகு கேதார்நாத், பத்ரிநாத் கோவில்களில் ரூ.3,400 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட இருக்கும் சாலை மற்றும் ரோப்கார் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். குறிப்பாக சீனாஎல்லையை இணைக்கும் வகையில் மனாவில் இருந்து மனாபாஸ் வரையிலான சாலை ரூ.574 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்தபணி 2026 மார்ச்சில் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் பின்னர் மானா கிராமத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். இதையடுத்து நேற்று மானா அருகே கடல்மட்டத்தில் இருந்து 11,300 அடி உயரத்தில் பனிபிரதேசத்தில் எல்லை சாலை அமைப்பினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இதையடுத்து பிரதமர் மோடி நேற்று இரவு அங்கேயே தங்கினார். இதுபற்றிய அறிவிப்பு தாமதமாக வந்ததால் அதிகாரிகள் திகைத்துபோயினர். இருப்பினும் பிரதமர் மோடி தங்குவதற்காக ஏற்பாடுகள் விரைவாக செய்து முடிக்கப் பட்டன.
அதன்படி தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரத்தில் பிரதமர் மோடி தங்கினார். மேலும் எல்லைசாலை அமைப்பினருக்கான சமையல் தொழிலாளி சமைத்த உணவை அவர் சாப்பிட்டார். பிரதமர் மோடி கிச்சடியை விரும்பி சாப்பிடுவார் என்பதால் அங்கிருந்த பொருட்களை வைத்து கிச்சடி சமைக்கப்பட்டது. மேலும் மாண்டவே கி ரொட்டி, சட்னி, புட்டு ஆகியவற்றையும் பிரதமர் ருசிபார்த்தார்.
இதுபற்றி எல்லை சாலை அமைப்பின் அதிகாரிகள் கூறுகையில், ‛‛பிரதமர் மனாவில் எங்களுடன் தங்க இருப்பதாக திடீரென்று கூறினர். இருப்பினும் 72 மணிநேரத்துக்கு முன்புகூறியதால் நாங்கள் உஷாராகி ஏற்பாட்டை தீவிரப்படுத்தினோம். இங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் உடனடியாக அதனைசெய்தோம். தற்காலிகமாக அமைத்த கூடாரத்தில் பிரதமர் மோடி தங்கினார். இந்த கூடாரம் வெறும்தகரத்தால் ஆனது.
இந்த கூடாரத்தில் இருந்து இரவில் தொழிலாளர்களுடன் அவர் கலந்துரையாடினர். இந்த வேளையில் கிச்சடி சமைக்க பிரதமர் மோடி கூறினார். பிரதமருக்காக எந்த உணவுபொருட்களும் கொண்டு வரப்படவில்லை. இதனால் தொழிலாளர்களுக்காக வைக்கப்பட்டு இருந்த ரேஷன் பொருட்கள் மூலம் உணவுதயாரித்து வழங்கப்பட்டது.
இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து 11,300 அடி உயரத்தில் உள்ளது. இங்கு இரவுநேரத்தில் பூஜ்ஜியம் டிகிரி வெப்பநிலை நிலவும். இதனால் அறையை சூடாக வைத்திருக்க சிறிய மின்ஹீட்டர் பிரதமர் மோடியின் கூடாரத்தில் பயன் படுத்தப்பட்டது. வேறு எந்த வசதிகளும் பயன்படுத்தப்பட வில்லை” என்றார்.
மேலும் உணவு தயாரித்த தேவேந்திரா, ராஜேஷ், அனிதேஷ் குமார் மற்றும் சுரேஷ்சைனி ஆகியோரை பிரதமர் மோடி பாராட்டினார். மேலும் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் அவர்களின் சேவையை பாராட்டி, ‛‛கடின உழைப்பால் தான் அனைத்தும் அடையாளப்படுத்தப் படுகிறது” என்ற வாசகத்தை பிரதமர் மோடி எழுதினார்.
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |