நாடு முழுவதும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்க முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமரின் கதி சக்தி திட்டம் தொடர்பான இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசியவர் பிரதமரின் கதிசக்தி திட்டம் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் மிகப் பெரிய பங்குவகிக்கும் எனக் கூறினார்.
தரமான கட்டமைப்புகளை கட்டுவதற்கான வழிகளை ஆராயவேண்டும் என்றும், அது விலைமலிவாக இருப்பதோடு, பேரழிவுகளை தாங்கும் வகையில் நீடித்து நிற்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். ஒருங்கிணைந்த கூட்டாட்சியை வலுப்படுத்த ஏதுவாக மாநில அரசுகளுக்கு ஒருலட்சம் கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், பன்முனை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மாநிலஅரசுகள் இந்த நிதியை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நெடுஞ்சாலைகள், கண்ணாடி ஒளியிழைகுழாய் இணைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்பட ஒவ்வொரு துறைகளிலும் முதலீடுகளை அதிகரிக்க அரசு முடிவு எடுத்திருப் பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |