கோபாலபுரம் குடும்பத்தை நான் மொத்தமாக எதிர்க்கிறேன்.

இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை எவரும் செய்யாத வகையில் எனது 13 ஆண்டுகால வங்கிக் கணக்கு, நிதிவிவரங்களை வெளியிட உள்ளேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

பாரதிய ஜனதா சிறுபான்மை பிரிவு சார்பில் சென்னை கீழ்பாக்கத்தில் ‘சமத்துவ கிறிஸ்துமஸ் விழா’ கொண்டாட்டம் நடைபெற்றது. பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை மற்றும் இந்து, கிறிஸ்தவ மத தலைவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய அண்ணாமலை, ”பாஜக சார்பில் சமத்துவகிறிஸ்துமஸ் விழா முதன் முறை நடக்கிறது. 1940 முதல் ஏதோவொரு காரணத்தால் அரசியலும், மதமும் இணைத்துவிடப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி மத அடிப்படையில் மாநிலங்களை பிரித்தனர். பெங்கால் மாநிலத்தை மத அடிப்படையில் பிரிக்க ஷியாமபிரசாத் முகர்ஜி எதிர்ப்பு தெரிவித்தார்.

தமிழகத்தில் ஜன சங்கத்தின் முதல்தலைவர் கிறிஸ்தவரான வி.கே ஜான் என்பவர்தான், எமர்ஜென்சி காலத்தில் secular (மதசார்பின்மை ) என்ற வார்த்தையை புதிதாக கொண்டுவந்தார். அதன் பிறகு எது secular என்பதில் குழப்பம் விளைவித்தனர். அவரவர் மதவழக்கத்தை, பாரம்பரியத்தை பின்பற்றுவதே  மதசார்பின்மை. இப்தார் போன்ற விருந்தில் ஓட்டுக்காகவும், போட்டோவுக்காகவும் பங்கேற்கதொடங்கிய பிறகுதான் இந்தியாவில் மதத்தை வைத்து அரசியல்செய்வது தொடங்கியது. இப்தாரில் நானும் கலந்து கொண்டேன். ஆனால் ஓட்டுக்காக நான் நடிக்கவில்லை.

பாஜகவிற்கு அனைத்து மதத்திலிருந்தும் தலைவர்கள்வருவர். எந்த மதத்தையும் யார் மீதும் திணிக்கமாட்டோம். உடனடியாக முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை நிறுத்தியதால் பாஜக இசுலாமியர்களுக்கு எதிரானகட்சி என தமிழகத்தில் சில கட்சியினர் பேசுகின்றனர். இந்தியா இப்போது தான் உடனடி முத்தலாக்கை நீக்கியுள்ளது. ஆனால் 1961 ல் பாகிஸ்தான் எடுத்துவிட்டது. உடனடி முத்தலாக்கை நீக்கிய 23 வது நாடுதான் இந்தியா , ஆப்கானிஸ் தான், இலங்கை , வங்கதேசம், இந்தோனேசியாவில் உடனடி முத்தலாக் நடைமுறை முன்பே தடை செய்யப்பட்டுவிட்டது.

இங்கிருக்கும் சிலருக்கு புரிதல்இல்லை. புத்தகம் படிப்பதில்லை. உலகில் நடக்கும் எதையும் அவர்கள் தெரிந்துகொள்வதில்லை. கும்மிடிப்பூண்டிக்கும் சென்னைக்கும் இடையில் அமர்ந்துகொண்டு அரசியல் பேசுகின்றனர். பாஜக குறித்து சொல்லப்பட்ட ஒவ்வொரு பொய்களையும் களை எடுத்து வருகின்றோம். 2024இல் மிகப்பெரிய தாக்கத்தை தமிழகத்தில் பாஜக ஏற்படுத்தும். நான் கவுன்சிலரோ, ஊராட்சிமன்ற தலைவரோ, சட்டமன்ற உறுப்பினரோ,  நாடாளுமன்ற உறுப்பினரோ இல்லை. அரசுபணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட தற்போது வருமானம் பெறவில்லை. ஆனாலும் என்னிடம் திமுக ஒருகேள்வி கேட்டுள்ளது.

திமுகவினர் எனது உடைகள், கடிகாரம், கார்குறித்து கேள்வி கேட்பதை வரவேற்கிறேன். இதற்காகத்தான் ஒன்றரை ஆண்டுகளாக காத்திருக்கிறேன். இந்திய அரசியலில் யாரும்செய்யாததை ஒருமாநிலத் தலைவராக நான் செய்ய உள்ளேன். தமிழகம் முழுவதும் விரைவில் பாஜக சார்பாக  நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். 234 தொகுதிகளுக்கும் நடந்துசென்று அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து  கோயில்களுக்கும் செல்லஉள்ளேன். எனது நடை பயணத்தை தொடங்கும்போது, நான் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான 2010 – 11ஆம் ஆண்டு முதல் எனது வங்கிக்கணக்கு நிதி விவரங்களை, மக்களுக்கு சமர்ப்பிக்க உள்ளேன்.

கடந்த 13 ஆண்டில் நான்செய்த  அனைத்து செலவுகள், எனது வருமானம் குறித்து இணையதள வலைதளத்தில் நடை பயணம் தொடங்கும் முதல் நாளிலேயே பதிவுசெய்ய உள்ளேன். ஐந்துரூபாய் கொடுத்து நான் படத்திற்கு சென்றிருந்தாலும் அதுபதிவாகி இருக்கும். எனது மனைவி என்னைவிட 7 மடங்கு அதிகம் ஊதியம்பெறுகிறார். அவரது ஊதிய விவரத்தையும் வெளியிட உள்ளேன். கட்சித்தலைவரான பிறகு நான் எனதுமனைவியுடன் பொது இடங்களுக்கு செல்வதில்லை. ஒன்றாக குடும்ப திருமணங்களுக்கும் செல்வதில்லை. அரசியலுக்காக என்மீது வீசப்படும்சேறு அவர்மீது படக் கூடாது என்று அவருடன் சேர்ந்து நான் எங்கும் செல்வதில்லை.
தேர்தல் ஆணையம் 10% விவரங்களைத்தான் கேட்கும். நான் 100% விவரங்களையும் தெரியப் படுத்துகிறேன். ரஃபேல் விமானம் இந்தியாவிற்கு வர வேண்டும் என்று போலீஸ் அதிகாரியாக எதிர்பார்த்தவன். பல கூட்டங்களில் ரஃபேல் குறித்து பேசியுள்ளேன். எனவே ரஃபேல் நிறுவன கடிகாரத்தை நான் அணிந்துள்ளேன். சீனாவிற்கும், பாகிஸ்தானிற்கும் உளவாளிகளாக சில தமிழக அரசியல்கட்சியினரும் இருக்கின்றனர். கோபாலபுரம் குடும்பத்தை நான் மொத்தமாக எதிர்க்கிறேன். எனவே என் குடும்ப சொத்துவிவரத்தையும் மொத்தமாக வெளியிட உள்ளேன்.
எனது அப்பா, என் அம்மா, என் உடன் பிறந்தோர், என் மனைவியின் வங்கிக்கணக்கு விவரங்களையும் வெளியிட உள்ளேன். எனது மனைவி குடும்பத்தினர் அனுமதி பெற்று அவர்களது வங்கி விவரங்களையும் வெளியிடுவேன்” என்று கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...