நிடி ஆயோக் கூட்டத்திற்கு முதலமைச்சர் வராததற்கு பயமே காரணம்-அண்ணாமலை

“முதல்வர் ஸ்டாலின், பயம் காரணமாக தான் நிடி ஆயோக் கூட்டத்திற்கு செல்லவில்லை,” என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி எழுதிய, ‘கனெக்டிங் 1.4 பில்லியன்’ நுால் வெளியீட்டு விழா, சென்னை தி.நகர் கமலாலயத்தில் நடந்தது.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நுாலை வெளியிட, ‘அன்பு பாலம்’ நிறுவனர் கல்யாணசுந்தரம் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், இந்திய ஜனநாய கட்சி தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அண்ணாமலை பேசியதாவது:

பணக்காரராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், தொழில்நுட்பம் இருவரிடமும் இருக்கும் என்ற நிலை, இந்தியாவில் தான் உள்ளது.

நுாலில், பிரதமர் மோடி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட இலவச கழிப்பறை திட்டம், குடிநீர் திட்டம் என, பல இடம் பெற்றுள்ளன. குழாயில் பாதுகாப்பாக குடிநீர் வழங்குவதால், ஆண்டுக்கு, 2 வயதுக்கு கீழ், 1.36 லட்சம் குழந்தைகளின் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.

இன்று புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இளைஞர்களுக்கு, 40 வினாடிக்குள் ஒரு தகவலை கொடுத்தால் தான் அவர்களால் கிரகிக்க முடியும். பா.ஜ.,வில் உள்ள இளைஞர்கள் புத்தகம் எழுத வேண்டும்; அதை கட்சி ஊக்குவிக்கும்.

தமிழகத்தில் பா.ஜ., எழுத்தாளர்கள் அதிகம் வர வேண்டும். திராவிட கட்சிகளில் எழுத்தாளர்கள் அதிகம் உள்ளனர். அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்றால், பா.ஜ.,வில் எழுத்தாளர்கள் வர வேண்டும்.

பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயர் இல்லை என்பதால், நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், 2022, 2023, 2024 என, நிடி ஆயோக் மூன்று கூட்டங்களுக்கு செல்லவில்லை.

நிடி ஆயோக் கூட்டத்திற்கு சென்றால், முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பேச வேண்டும். பயம் காரணமாக தான் கூட்டத்திற்கு அவர் செல்லவில்லை. அந்த இடத்தில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும். முதல்வரின் நாடகத்தை மக்கள் நன்றாக பார்த்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக கூட்டணி வெற்றிக்கான காரணம ...

பாஜக கூட்டணி வெற்றிக்கான  காரணம் பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேச ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமை யிலான தேசிய ...

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

மருத்துவ செய்திகள்

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...