பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம், பி.பி.சி. நிர்வாகத்தால் தயாரிக்கப் பட்டது அல்ல. தனியார் அமைப்பால் தயாரிக்கப்பட்டு, பி.பி.சி.யால் மேற்பார்வை பார்க்கப் பட்டது என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் பாப் ப்ளாக்மேன் தெரிவித்திருக்கிறார்.
பிரிட்டனை தலைமை இடமாகக்கொண்டு செயல்பட்டு வரும் பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனம், “இந்தியா: மோடி மீதான கேள்வி” என்கிற தலைப்பில் சமீபத்தில் 2 ஆவணப் படங்களை வெளியிட்டது. இந்த விவகாரம் இந்தியாவில் பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவின் உள்விவகாரத்தில் இங்கிலாந்து எப்படி தலையிடலாம் என்று ஏராளமானோர் கேள்விஎழுப்பினர். அதேபோல, குஜராத் கலவரத்துக்கும் பாரதபிரதமர் மோடிக்கும் தொடர்புஇல்லை என்று இந்திய உச்சநீதிமன்றமே தெரிவித்து விட்டது. அப்படி இருக்க, மோடியை குற்றவாளியைப்போல சித்தரித்து பி.பி.சி. எப்படி ஆவணப்படத்தை வெளியிடலாம் என்று ஏராளமானோர் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில்தான், பி.பி.சி. வெளியிட்ட ஆவணப்படம், அந்நிறுவனத்தால் தயாரிக்கப் பட்டது அல்ல. தனியார் அமைப்பால் தயாரிக்கப்பட்டு பி.பி.சி.யால் மேற்பார்வையிடபட்டது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பாப்ப்ளாக்மேன், தனியார் செய்திநிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் இருக்கின்றன. கடந்த காலங்களைப் போலவே எதிர் காலத்திலும் பல்வேறு விஷயங்களை இருநாடுகளும் பகிர்ந்துகொள்ள இருக்கின்றன. மேலும், இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் நன்மைபயக்கும் சுதந்திரமான வர்த்தக வளர்ச்சி குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். இந்த சூழலில், அதை சீர்குலைக்கும் வகையில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் வருத்தம் தரக்கூடியதே.
இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டிஎழுப்புவதில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்திய அரசு குறிப்பிடத் தகுந்த வேலையைச் செய்திருக்கிறது. தற்போது உலகின் 5-வது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கிறது என்றால் அதற்குக்காரணம் மோடிதான். மக்கள் நினைத்தால் அரசை மாற்றக் கூடிய உலகின் மிகப்பெரிய இந்திய ஜனநாயகத்தை நாமும் கொண்டாடவேண்டும். நிகழாண்டு ஜி20 நாடுகளுக்கு இந்தியா தலைமை யேற்றிருக்கும் நிலையில், நாங்கள் இந்தியாவுடனான உறவை வளர்த்து வருகிறோம். பி.பி.சி. நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம் பெரும்பாலும் பிரசாரப்படம் போலவே இருந்தது. அந்த ஆவணப்படம், மலினமான இதழியல் பாணியில், நரேந்திரமோடியை தாக்கியிருக்கிறது. மோடி குஜராத் முதல்வராக இருந்த காலமும், பிரதமராக இருக்கும் காலமும் முழுவதுமாக புனைவுகள் நிறைந்ததாக இருந்தது. அந்த ஆவணப்படம் பி.பி.சி.யால் ஒளிபரப்பப் பட்டிருக்கக் கூடாது. ஏனெனில் உலக அளவில் பி.பி.சி.க்கென்று ஒருஅங்கீகாரம் இருக்கிறது.
மேலும், அந்த ஆவணப்படம் பி.பி.சி. நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்டது அல்ல. ஒருதனியார் அமைப்பால் தயாரிக்கப்பட்டு, பி.பி.சி.யால் மேற்பார்வையிடப் பட்டது. அந்த ஆவணப்படம் உண்மையைக் கூறவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குஜராத்கலவரம் குறித்த உண்மைகளை, அந்த ஆவணப்படம் பார்க்கத்தவறிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் தீர விசாரித்த உச்ச நீதிமன்றம், அதனை உறுதிப் படுத்தும் எந்த ஆதாரங்களும் இல்லை என்று கூறியிருந்தது. இந்த உண்மையை ஆவணப் படம் பார்க்க தவறிவிட்டது. அதேபோல, பி.பி.சி. நிர்வாகம் அலுவலகத்தில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையானது, அந்நிறுவனம் ஏதாவது விதிமீறலில் ஈடுபட்டிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்காகத்தான் அதிகாரிகள் ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். அதோடு, இந்தியாவிற்குள் இயங்கும் நிலையில், பி.பி.சி. நிர்வாகம் விதிகளுக்கு உட்பட்டுத்தான் செயல்படுகிறதா என்பதை தெளிவு படுத்துவது அவர்களது கடமையாகும். விரைவில் இதுசரியாகும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |