நூல்கள் நமது ஜனநாயகத்திற்கு கிடைத்த களஞ்சியங்கள் – சிவராஜ் சௌகான்

நூல்கள் நமது ஜனநாயகத்திற்கு கிடைத்த களஞ்சியங்கள் என ஜனாதிபதி மாளிகை தொடர்பான மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் பேசினார்.

ராஷ்டிரபதி மாளிகையான ஜனாதிபதி மாளிகையின், மற்றும் இந்தியாவின் முதல் ஜனாதிபதி துவங்கி தற்போதைய ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடர்பாக இன்று(18.07.2024) மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன.

அவை விவரம்:

1) நமது நம்பிக்கைக்குரிய சிறகுகள்: தொகுப்பு – 1 , 2) ‘ராஷ்டிரபதி பவன்: ஹெரிடேஜ் மீட்ஸ் தி பிரசன்ட்’ , 3) ‘கஹானி ராஷ்டிரபதி பவன் கி’ என்ற பெயரில் நூல்கள் வெளியிடப்பட்டன.

இதில் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன், மத்திய அரசு செயலாளர் சஞ்சய் ஜாஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல் நூலான ‘நமது நம்பிக்கைகளுக்கான சிறகுகள் – தொகுப்பு 1’, ‘ ராஷ்டிரபதி பவனின் பாரம்பரியம் நிகழ்காலத்தை சந்திக்கிறது, திரௌபதி முர்மு தமது முதலாம் ஆண்டு காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆற்றிய உரைகள் இடம்பெற்றுள்ளன. இவை தேசத்தின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள், மக்களுக்கு நம்பிக்கையை வழங்குகின்றன.

இரண்டாவது நூலான ஹெரிடேஜ் மீட்ஸ் தி பிரசன்ட்’ ராஷ்டிரபதி மாளிகையின் வரலாறு, மரபு, கட்டிடக்கலை சிறப்பைக் கூறுகிறது.முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத் முதல் தற்போதைய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வரையிலான ஒவ்வொரு குடியரசுத் தலைவரின் பயணத்தையும் இது விவரிக்கிறது.

மூன்றாவது நூலான ‘கஹானி ராஷ்டிரபதி பவன் கி’ என்ற நூல் ஜனாதிபதி மாளிகையின் நூறு ஆண்டுகால வரலாற்றை எளிய வார்த்தைகளில் முன்வைக்கிறது. மாளிகையின் பல கோணங்களிலான படங்களுடன் கவர்ச்சிகரமான நடையில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.

நூல்களை வெளியிட்டு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேசியது, நமது ஜனநாயகத்திற்கும், ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கிடைத்த களஞ்சியமாகும் என்றார்.

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியது, இந்த நூல்கள் வரும் தலைமுறையினருக்கு சிறந்த தகவல் தொகுப்பாக அமையும் என்றார். பின்னர் மூன்று நூல்களின் பிரதிகள் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வழங்கினர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜே ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜேபி நட்டாவையும் சந்நதித்த பழனிசாமி 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான ...

அ. தி மு க , பாஜக கூட்டணி – விளக் ...

அ. தி மு க ,  பாஜக கூட்டணி – விளக்கமளித்த பழனிசாமி அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு அதிமுக ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிர ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 ல் திறந்து வைக்கிறார் பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை க ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை கைவிடும் இயக்கங்கள் ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல்இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்க ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...