மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, விருப்ப மனுக்கள் இன்று (11.04.2025) மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெறப்பட்டது.
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பத்து பேர் கையெழுத்திட்ட பல விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அனைத்து விண்ணப்பங்களுமே கட்சியின் சட்டமன்ற குழுத்தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் MLA அவர்களையே முன்மொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வேறு யாரையும் முன்மொழிந்து எந்த விண்ணப்பங்களும் பெறப்படவில்லை.
மேலும், மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை அவர்கள், பாஜகவின் முன்னாள் மாநில தலைவர்கள் திரு. பொன்.இராதாகிருஷ்ணன் Ex.MP அவர்கள், திருமதி.டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், திரு. Dr.L.முருகன் அவர்கள் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் திரு.H.ராஜா அவர்கள், அகில இந்திய மகளிர் அணி தலைவி திருமதி.வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் திரு . நயினார் நாகேந்திரன் MLA அவர்களை ஒரு மனதாக தலைவர் பதவிக்கு முன் மொழிந்தனர்.
ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவானது நாளை 12.04.2025, மாலை 4 மணி அளவில் சென்னை ஸ்ரீவாரி கல்யாண மண்டபம், வானகரத்தில் அறிவிக்கப்படவுள்ளது என்பதனை தெரிவித்து கொள்கிறேன்.
அதிகாரப்பூர்வமாக என்று பாஜக மணிலா தேர்தல் அதிகாரி சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |