”உலகின் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. 10 ஆண்டுகளில், பால் உற்பத்தி 65 சதவீதம் அதிகரித்துள்ளது” என பிரதமர் மோடி தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசிக்கு இன்று (ஏப்ரல் 11) பிரதமர் மோடி சென்றார். பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி ரூ. 3,880 கோடி மதிப்பிலான 44 நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: காசி எனக்குச் சொந்தமானது, நான் காசியைச் சேர்ந்தவன். கடந்த 10 ஆண்டுகளில், வாரணாசியின் வளர்ச்சி புதிய வேகத்தை எட்டியுள்ளது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு இளைஞருக்கும் சிறந்த வசதிகளை வழங்குவதற்கான உறுதிப்பாடு ஆகியவை இன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டங்களால் எளிதாக்கப்படும். அதிகாரத்தை விரும்புபவர்கள் (எதிர்க்கட்சிகள்) தங்கள் குடும்ப நலன்களை மட்டும் மேம்படுத்துகின்றன. ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டு வருகிறோம்.
இன்று, காசிக்குச் செல்பவர்கள் அனைவரும் அதன் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளைப் பாராட்டுகிறார்கள். வயதானவர்களுக்கு சிகிச்சை இலவசம் என்பது எனது உத்தரவாதம். இன்று, டில்லி மற்றும் மும்பையின் பெரிய மருத்துவமனைகளில் இருக்கும் வசதிகள் உங்கள் வீட்டிற்கு அருகில் வந்துள்ளன. இதுதான் வளர்ச்சி.
உலகின் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. 10 ஆண்டுகளில், பால் உற்பத்தி 65 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வெற்றி நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கும், நாட்டின் கால்நடை வளர்ப்பு சகோதரர்களுக்கும் சொந்தமானது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |