காலம் முதல் இன்றுவரை மனிதர்கள் எந்த ஒரு செயலை செய்வதென்றாலும் முதலில் கடவுளை வணங்கியே ஆரம்பிக்கின்றனர் . குறிப்பாக இந்துக்கள் முழு முதற்கடவுளாக
பிள்ளை யாரையே வணங்கி வருகின்றனர். ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரை பிள்ளையாரை மிஞ்சி ஆறுபடை வீடுகளின் அரசன் முருகனே மிகவும் பிடித்த கடவுள் என்று கூறலாம். முருகு என்றால் அழகு; அழகு என்றால் முருகன் என்பதே நம்மவர்களின் வழக்கம்.
அழகின் தலைவன் முருகனுக்கு ஆறுபடை வீடுகள் உண்டு. அவை அனைத்தும் தமிழகத்திலேயே அமைந்துள்ளன என்பது தனிச்சிறப்பு . அதனாலேயே அவர் தமிழ் கடவுள் என்று அலைக்கபடுகிறார் . அவரின் ஆறுபடை வீடுகள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்புகளுடையது . குறிப்பாக ஆறுபடை வீடுகளின் மூன்றாவது வீடாக விளங்கும் பழநி மிகப் புகழ் வாய்ந்த வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பழநி நகர் சங்க காலப் பெருமையுடைய மிகப் பழமையான நகரம் ஆகும். சங்க இலக்கியங்கள் பழநி மலையை பொதினி என்றே குறிப்பிடுகின்றன. பொதினி என்ற பெயர்தான் பழநி என்று மருவிற்று என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். சங்க இலக்கியங்களில் ஒன்றான திரு முருகாற்றுப்படை "பழநி தலத்தில்" அமைந்துள்ள ஆவினன்குடியை மூன்றாம் படை வீடாகக் குறிப்பிடுகின்றது. பழநி திருத்தலம் முற்காலத்தில் கொங்கு நாட்டின் தெற்கு எல்லையாக விளங்கி வந்துள்ளது. பழநி பகுதியைக் கல் வெட்டுக்கள் வையாபுரி நாடு என்றே குறிப்பிடுகின்றன. இவ்வையாபுரி நாட்டை வையாபுரிக்கோப்பெரும் பேகன் என்ற மன்னன் ஆண்டு வந்துள்ளான். முற் காலத்தில் சித்தர்கள் பலர் வையாபுரி நாட்டில் வாழ்ந்துள்ளனர்.இத்தலத்திற்கு சித்தன் வாழ்வு என்னும் ஒரு திருப்பெயரும் உண்டு.
இத்தலத்தின் வடகிழக்கில் சிறிது தொலைவில் சரவணப் பொய்கை உள்ளது. இப்பொய்கையில் நீராடியே கோயிலுக்குள் செல்ல வேண்டும் . மலையடிவார படிக்கட்டின் தொடக்கத்தில் பாத விநாயகர் , மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்கள் உள்ளன. மலையடிவாரத்தில் இருந்து 700 படிகள் உள்ளன. ஐந்து நிலைகளைக் கொண்ட அழகிய ராஜ கோபுரம் கம்பீரமாக காட்சி தருகின்றது . இக்கோயிலில் முருகபெருமான் மயில் மீது அமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமி என்னும் திருப்பெயருடன் காட்சி தருகிறார்.
இவ்வேலாயுத சுவாமியை கண்டு வழிபட்ட பின்னரே மலை கோயிலாகிய தண்டாயுதபாணி கோயிலுக்கு செல்ல வேண்டியது முறையாகும். இத் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா விசேஷமானது. இம்மலைக்கு எதிரில் சிறிது தொலைவில் இடும்பன் மலை காணப்படுகிறது. பழநி மலைக்கு சிவகிரி என்றும் இடும்பன் மலைக்கு சக்திகிரி என்ற பெயரும் உண்டு.
தொன்மையும் பெருமையும் வாய்க்கப் பெற்றது பழநித் தலமாகும் . பழநித்தலத்தின் பெருமையினை அருணகிரி நாதர் திருப்புகலிலும், கந்தர் அலங்காரத்திலும் குறிப்பிட்டுள்ளார். பதினாலுலகோர் புகழ் பழநி மாமலை மீதினி லேயுரை பெருமாளே என்று பதினாலுலகும் போற்றும் தலம் பழநி என்கிறார். காசியின் மீறிய பழனாபுரி என்று காசியை விட சிறந்த தலம் பழநி என்றும், அதிசயம் அனேகமுற்ற பழநி மலை என்றும் அருணகிரி நாதர் பழநித் தலத்தின் சிறப்பை பற்றித் திருப்புகழில் எடுத்துரைத்துள்ளார். புண்ணிய ஸ்தலமான பழநிக்கு நான் முதலிலேயே வந்து வழிபடவில்லையே என அருணகிரி நாதர், உனது பழநி மலையெனும் ஊரைச் சேவித்தறியேனே என்று மனம் உருகிப் பாடுகின்றார்.
முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் மூன்றாம் படை வீடான பொதினி எனும் பழநி குன்றின் மீது அமர்ந்துள்ளது . பழநி மலை கோயில் கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த குன்றின் மீது அமைந்துள்ள முருக கடவுளின் திரு உருவம் போகர் என்னும் சித்தரால் என்றும் அழியாத ஒன்பது பாசனங்களை உருவாக்கி ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டது. எப்போதும் அபிஷேகம் நடந்து கொண்டே இருக்கும். முருகபெருமானின் திருமேனியில் தோய்ந்த அபிஷேகப் பொருட்கள் தீராத நோய்களைத் தீர்க்கும் மருத்துவ குணம் உடையது . முருகன் திருவடிகளில் அப்பி வைத்த சந்தனமும் அளவிட முடியாத ஆற்றல் வாய்ந்தவை. இரவு அர்த்த ஜாமத்தில் தண்டாயுதபாணியின் மேல் சாத்தப்படும் சந்தனமும், கவுவீன தீர்த்தமும் அடுத்தநாள் அதிகாலையில் நிகழும் விசுவரூப பூஜைக்குப் பின் வழங்குவர் . இவை தீராத நோயையும் தீர்க்கும் மருத்துவ குணமுடையவை. தண்டாயுதபாணியின் திருமேனியில் பட்ட விபூதியும் பன்னீரும் அபிஷேகப் பாலும், பஞ்சா
மிர்தமும் சிறப்புமிக்கவை.
Tags; பழனி முருகன் கோவில், பழனி முருகன் கோயில மலை , பழனி மலையில் , பழனியில் , பழனியப்பா
You must be logged in to post a comment.
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
2prostate