அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல்

அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் சிங்ஹல். அயோத்தி ஶ்ரீ ராமஜன்ம பூமியை மீட்டு அவ்விடத்தில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட ஆலயம் அமைத்திட மாபெரும் மக்கள் இயக்கத்தினை வழிநடத்திச் சென்ற நவீன ஹனுமான் அசோக் சிங்ஹல் என்றால் அது மிகையாகாது.

உத்திரப்பிரதேசம் ஆக்ராவில் 1926 செப்டம்பர் 27 அன்று பிறந்தார். பெரியகுடும்பம். 7 சகோதரர்கள் ஒரு சகோதரி. தாயார் விதியாவதி தந்தை மஹாவீர் சிங்ஹல். அரசுப்பணியில் உயர் பதவியில் இருந்தவர். பூர்வீகம் உத்திரப் பிரதேசம் அலிகர் மாவட்டத்தில் பிஜோலி எனும் கிராமம்.
சன்யாசிகள் பண்டிதர்கள் தொடர்ந்து வீட்டிற்குவந்து செல்வது வழக்கத்தில் இருந்தது. அதனால் சிறுவயது முதல் ஹிந்து தர்மத்தின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.

1942 இல் உயர்கல்விகற்றிட அலஹாபாத் (பிரயாகை) சென்றார். அப்போது அங்கே பேராசிரியராகப் பணியாற்றிவந்த ரஜ்ஜூ பையா என்கிற பேரா. ராஜேந்திர சிங் அவர்கள் தொடர்பு ஏற்பட்டு சங்க ஷாகா அறிமுகானது.
சங்க ப்ரார்த்தனாவைக் கேட்ட இவரது தாயார் அசோக் சிங்ஹல் ஷாகா சென்றிட அனுமதியளித்தார்.

1947 இல் நாடு அந்நிய ஆங்கிலேயர் ஆட்சியில்இருந்து விடுதலை பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி ஒருபுறம். அப்போது நடந்த கோரமான தேசப் பிரிவினை படுகொலைகள் மனதில் ஏற்படுத்திய காயங்கள் மறுபுறம்.இத்தகைய தலைவர்களின்கீழ் நாட்டின் எதிர்காலம் பற்றிய கவலை மனதில் அலை மோதியது. எனவே தன்வாழ்க்கையை தேச நலனிற்காக அர்ப்பணித்திட முடிவு செய்த அசோக் சிங்ஹல் சங்க ப்ராச்சாரக்காக பணி யாற்றிட முடிவெடுத்தார்.
பனாரஸ் ஹிந்து விஸ்வ வித்யாலயாவில் உலோகவியலில் பொறியியல் (Mettellurgy Engneering) படித்துக்கொண்டிருந்த போது 1948 இல் மஹாத்மா காந்தி படுகொலைப் பழியை சங்கத்தின் மீது சுமத்தி தடை செய்யப்பட்டது. அதன் காரணமாக அசோக் சிங்ஹல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடைசி வருடத் தேர்வை யும் சிறையில் இருந்தே எழுதி தேர்ச்சிபெற்றார்.

1950 ஆம் ஆண்டு சங்க ப்ரச்சாரக்காக ஆனார். இசையில் அதிகநாட்டம் கொண்ட வர். சங்கப் பாடல்கள் பல இயற்றி அதற்கு மெட்டு அமைத்துள்ளார். அவைகள் இன்றும் பிரபலமாக இருந்து வருகிறது.

ப்ரச்சாரக்காக முதலில் கோரக்பூர், பிரயாகை, சஹரான்பூர், மற்றும் கான்பூரில் வேலை செய்து வந்தார். ப.பூ.ஶ்ரீ குருஜி ஜி மீதும், கான்பூரில் இருந்த மிகப்புகழ் பெற்ற வித்வான் ராமச்சந்திர திவாரியைத் தொடர்பு கொண்டு அவர் மீதும் அளவு கடந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந் தார்.

1975 இல் இந்திரா காந்தியின் சர்வாதிகார நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம்செய்து வந்தார். நெருக்கடி நிலை அகன்று சங்கத்தின் மீது போடப்பட்டிருந்த தடைகள் அகற்றப்பட்டபிறகு டெல்லி ப்ராந்த (டெல்லி + ஹரியானா) பிரசாரக்காக பொறுப்பேற்றார்.
1981 இல் தில்லியில் டாக்டர் கரன்சிங் தலைமையில் மிகப் பெரிய விராட ஹிந்து சம்மேளனம் நடைபெற்றது. அதன் வெற்றிக்குப்பின்பலமாக இருந்து பணியாற்றிய வர்கள் சங்க ஸ்வயம்சேவகர்கள் மற்றும் அசோக் சிங்ஹல் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

அம்மா நாட்டினைத் தொடர்ந்து அசோக் சிங்ஹல் ஜி விஸ்வ ஹிந்து பரிஷத் பணிக்கு அனுப்பப்பட்டார்.ஏக்காத்ம ரதயாத்திரை, சம்ஸ்க்ருதி ரக்ஷா நிதி, ராம்ஜானகி ரத யாத்திரை, ராம்சிலா பூஜை, கடைசியாக ராம் ஜோதி யாத்திரை என விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

வி.ஹெச்.பி. பணிகளை மேலும் பலகோணங்களில் விரிவடையச் செய்த தில் அசோக் சிங்ஹல் ஜி யின் பங்கு அதிகமாகும். பஜ்ரங் தள், தாய் மதம் திருப்புதல், கங்கையைப் பாதுகாத்தல், பசு பாதுகாப்பு, சேவை, சமஸ்கிருதி (பண்பாடு), ஏகல் வித்யாலய என பல திட்டங்கள் தொடங்கப்பட்டது. ஶ்ரீ ராம ஜன்ம பூமி விடுதலை இயக்கத்தின் வெற்றியி னால் நாட்டின் சமுதாய & அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன.

வி.ஹெச்.பி.யில் அசோக் சிங்ஹல் ஜி1982 – 86 வரை இணை பொதுச் செயலாளர்,1986 – 95 பொதுச் செயலாளர், 95 – 2005 வரை செயல் தலைவர், 2005 – 11 வரை தலைவர் பின்னர் மீண்டும் புரவலர் என பொறுப்புகளை வகித்துள்ளார்.

ஹிந்து சமுதாயத்தை ஒன்றினைப்பதே மிகப் பெரிய சவாலான பணி. அதிலும் பலவிதமான சித்தாந்தங் கள், சம்பிரதாயங்கள், பழக்க வழக் கங்கள் கொண்ட சந்நியாசிகள் மடாதிபதிகளை ஒன்றினைப்பது என்பது பகீரதப் பிரயத்தனமாகும். அதில் மாபெரும் வெற்றியைப் பெற்று சாதனை புரிந்ததில் அசோக் சிங்ஹலின் பெயர் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

அவருடைய பணிவு பக்தி மரியாதைஅளிக்கும் விதத்தால் பல ஆயிரக் கணக்கான சந்நியாசிகள் மடாதிபதி கள் துறவியர்கள் ஶ்ரீ ராம ஜன்ம பூமி விடுதலை இயக்கத்தின் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்து வந்தனர்.
சிங்ஹல் ஜியின் செயல்பாடுகளால் லட்சக்கணக்கான இளைஞர்கள் ராம ஜன்ம பூமி விடுதலை இயக்கத்தின் அழைப்பை ஏற்று 1992 டிசம்பர் 6 அன்று கரசேவைக்காக அயோத்தி க்கு வந்தனர்.

தடைகளை பொடிப் பொடியாக்கி 500 ஆண்டுகால போராட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தனர். அந்த அவமானச் சின்னம் இளைஞர்களால் தகர்க்கப்பட்டது.

அயல் நாடுகளில் இயக்க வளர்ச்சிக்காக 2015 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஹாலந்து அமெரிக்கா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார்.
65 ஆண்டுகள் தியாகமயமான ப்ரசாரக் வாழக்கை வாழ்ந்து, ஆயிரக் கணக்கான கார்யகர்த்தர்கள் மனதில் இடம் பிடித்து, தேசநலனிற்காக தொண்டாற்றிட ஊக்கமும் உற்சாகமு ம் அளித்த அசோக் சிங்ஹல் ஜி வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக 2015 நவம்பர் 15 அன்று பாரத மாதாவின் திருவடித் தாமரையில் ஐக்கியமானார்.

அவர் எந்த ஒரு லட்சியத்திற்காக வாழ் நாள் முழுவதும் பாடுபட்டாரோ அந்தக் கனவு விரைவில் நிறைவேறப் போகிறது. அயோத்தியில் ஶ்ரீ ராம பிரானுக்கு மிகப் பிரம்மாண்டான ஆலயம் அமக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஶ்ரீராமனுக்கு ஹனுமான் அன்று செய்த சேவையைப் போன்று இன்று நவீன ஹனுமானாக அசோக் சிங்ஹல் ஜி அயோத்தியின் பாரம் பரியப் பெருமைகளை மீண்டும் நிலை நிறுத்திட சேவையாற்றியுள் ளார். அயோத்தி என்றால் அசோக் சிங்ஹல் பெயர் நினைவுக்கு வரும். ஜெய் ஶ்ரீராம்!

நன்றி சடகோபன் நாராயணன் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...