தேசியத் தலைநகர் தில்லியின் திறந்த வெளிப்பகுதிகளில், அதிகஅளவில் மரக்கன்றுகள் மற்றும் பூச்செடிகளை நட காற்றுத்தர மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது. தூசியைத் தணித்து காற்றின் தரத்தை அதிகரிப்பதற்கு சிறந்த வழிமுறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
தேசிய தலைநகர் பகுதியின் பசுமைப்பரப்பை அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் காற்று தர மேலாண்மை ஆணையம் மேற்கொண்டுள்ளது. தேசிய தலைநகர் பகுதியில் அமைந்துள்ளகல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து இதற்கான முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக தேசிய தலைநகர் பகுதியை உள்ளடக்கிய தில்லி, ஹரியானாவின் சிலமாவட்டங்கள், ராஜஸ்தானின் சிலமாவட்டங்கள் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் சில மாவட்டங்களில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
2021-22-ம் ஆண்டில் 28,81,145 புதிய மரக்கன்றுகள் மட்டுமே நடப்பட்ட நிலையில், 2022-23-ம் ஆண்டில் என்சிஆர் பகுதியில் 3,11,97,899 புதிய மரக்கன்றுகள் நடப்பட்டன. 2023-24-ம் ஆண்டில் சுமார் 3.6 கோடி புதிய மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டது. நடப்பு நிதியாண்டான 2024-25-ம் ஆண்டில் சுமார் 4.5 கோடி மரக்கன்றுகள் மற்றும் பூச்செடிகளை நட திட்டமிடப்பட்டுள்ளது. தில்லியில் 56.40 லட்சம் மரக்கன்றுகளும், ஹரியானாவில் 1.32 கோடி மரக்கன்றுகளும், உத்தரப்பிரதேசத்திற்கு உட்பட்டபகுதிகளில் சுமார் 1.97 கோடி மரக்கன்றுகளும் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |