நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளை பசுமை நெடுஞ்சாலைகளாக மாற்றும் விதமாக, சாலையோரங்களில் இதுவரை 402.28 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள அவர், மரக்கன்று நடுதல், அழகுபடுத்துதல், பராமரிப்பு என்ற அடிப்படையில், 2009-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய சாலைப்போக்குவரத்து மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், மண்ணின் தன்மை, பருவநிலை அடிப்படையில் மரக்கன்றுகள் நடப்படுவதாக கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில், சாலையோரங்கள் மற்றும் சாலை நடுவில் உள்ள தடுப்புகளில் இதுவரை 21.67 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாகவும் நிதின் கட்கரி, தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |