நாட்டுப் பிரிவினையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். பிரிவினை கொரடூரங்களின் நினைவு தினத்தை குறிக்கும் வகையில், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரிவினை எண்ணற்ற மக்களுக்கு ஏற்படுத்திய கடுமையான தாக்கம் மற்றும் துன்பங்களை திரு மோடி நினைவு கூர்ந்துள்ளார்.
நாட்டில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் பிணைப்புகளைப் பாதுகாப்பதில் நம்பிக்கை கொண்ட மக்களின் உறுதிப்பாட்டை திரு மோடி பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“#PartitionHorrorsRemembranceDay நாளில், பிரிவினையின் கொடூரங்களால் ஏற்பட்ட தாக்கத்தை எதிர் கொண்டு மிகவும் பாதிக்கப்பட்ட எண்ணற்ற மக்களை நாம் நினைவு கூர்கிறோம். மனித எழுச்சியின் சக்தியை விளக்கும் அவர்களின் துணிச்சலுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் இது உள்ளது. பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் தங்கள் வாழ்க்கையில் மீண்டு வந்து மகத்தான வெற்றியை அடைந்தனர். இன்று, நமது தேசத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் பிணைப்புகளை எப்போதும் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறோம்.
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |