நாகை ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் சிக்கல் அப்பா குட்டிப்பிள்ளை திருமண அரங்கில் 19.03.2012 அன்று ஒன்றிய தலைவர் எஸ்.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய துணைத் தலைவர் ஆவராணி பால் கார்த்தி வரவேற்புரை வழங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ஜீ.ஜீவாமோகன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் எஸ்.பி.கணேஷ், முன்னால் மாவட்ட பொது செயலாளர் ஆர்.கே.சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் திரு. கருப்பு (எ) முருகானந்தம் நாகை மாவட்ட தலைவர் திரு. டி.வரதராஜன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
மாவட்ட விவசாய அணி செயலாளர் பி.எம்.குகானந்தம், ஒன்றிய பொதுச்செயலாளர் வி.மகாலிங்கம், ஒன்றிய செயலாளர் ஜே.மணிவாசகம், ஒன்றிய செயலாளர் சேகர், சங்கை குமரையன், கருவேலி ஐயப்பன், ஆவராணி வினோத் மற்றும் ஏராளமான செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.
தீர்மானம் 1- இக்கூட்டத்தில் வரயிருக்கின்ற ஏப்ரல் 28,29 தாமரை சங்கமம் மாநில மாநாட்டிற்கு நாகை ஒன்றியம் சார்பாக சுமார் 1000 நபர்கள் சுமார் 30 வாகனங்களில் பங்கேற்பதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் 2–ஆவராணி கிராமம் சுற்றியுள்ள அனைத்து விவசாய நிலங்களுக்கும் பயன்படும் பாசன வாய்க்கால் கீவளுர் முதல் ஆவராணி வரை தூர்வாரபடாமல் பாசனத்திற்கு வழியில்லாத நிலையில் விவசாயம் ஸ்தம்பிக்கும் அபாய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனை உடனே சர்வே செய்து தூர்வாரி விவசாயம் செய்ய வழி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் 3 – சிக்கல் சிங்காரவேலவர் ஆலயத்திற்கு அருகில் இருந்த அரசு மதுபானக்கடை இடம் பெயர்க்கப்பட்டதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
நன்றியுரை ஒன்றிய துணைத்தலைவர் ஆ.பார்த்திபன் வழங்கினார்.
கூட்ட ஏற்பாட்டை சிக்கல் எஸ்.எஸ்.விஜய் செய்திருந்தார்.
செய்திகளுக்கு நன்றி நாகை S.S.Vijay
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.