நிலநடுக்கத்தால் கடும் சேதத்தை சந்தித்துள்ள மியான்மருக்கு மேலும், 31 டன் நிவாரணப் பொருட்களை விமானம் வாயிலாக மத்திய அரசு நேற்று அனுப்பியது.
நம் அண்டை நாடான மியான்மர் மற்றும் தாய்லாந்தை, கடந்த 28ல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இதில், மியான்மர் மோசமான பாதிப்பை சந்தித்தது. 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.
மியான்மருக்கு உதவும் வகையில் மத்திய அரசு, ‘ஆப்பரேஷன் பிரம்மா’ பணியை துவங்கியது. அங்குள்ள இரண்டாவது பெரிய நகரமான மண்டாலேவில் நிலநடுக்கத்தால் நுாற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
அவர்களுக்கு சிகிச்சை அளிக்க நம் நாட்டு ராணுவம் மிகப்பெரிய தற்காலிக மருத்துவமனையை அமைத்து தந்துள்ளது. அங்கு இந்திய மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 118 பேர் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை, உ.பி., மாநிலம் காஜியாபாதில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து விமானம் வாயிலாக 31 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இது குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘ஆப்பரேஷன் பிரம்மா திட்டத்தின் கீழ், மியான்மரின் மண்டலேவில் உள்ள இந்திய ராணுவ மருத்துவமனைக்கு தேவையான பொருட்கள் உட்பட, 31 டன் நிவாரணப் பொருட்கள், நம் விமானப் படையின் விமானத்தில் நேற்று அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன’ என கூறியுள்ளார்.
இதே போல், நம் கடற்படையின் ஐ.என்.எஸ்., கரியால் கப்பல் வாயிலாக அனுப்பப்பட்ட அரிசி உட்பட 440 டன் நிவாரணப் பொருட்கள், மியான்மருக்கு நேற்று முன்தினம் சென்றடைந்தன.
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |