தில்லியில் 109 புதிய பயிர் ரகங்களை இன்று வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். பருவநிலைக்கு உகந்த மற்றும் அதிக மகசூல் தரும் பயிர் வகைகள் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறுவது குறித்து பிரதமர் திருப்தி தெரிவித்தார். அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்த அவர், இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து விரிவாக விவாதித்தார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவு வருமாறு:
“நமது விவசாய சகோதர சகோதரிகளுக்கு அதிகாரம் அளிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்த வகையில், தில்லியில் 109 புதிய பயிர் வகைகளை வெளியிடும் வாய்ப்பை இன்று நாம் பெற்றுள்ளோம். பருவநிலைக்கு உகந்த, அதிக மகசூல் தரும் இந்த ரகங்கள் உற்பத்தியையும், விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்கும். ”
“நமது விவசாய சகோதர சகோதரிகளும் இயற்கை விவசாயத்தை நோக்கி வேகமாக அடியெடுத்து வைக்கிறார்கள் என்பது எனக்கு திருப்தி அளிக்கிறது. இன்று அவர்களின் அனுபவங்களை நெருக்கமாக அறியும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நேரத்தில் இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்தும் விரிவாக விவாதித்தோம். ”
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |