நாட்டின் நலனுக்காகவே வக்ப் சட்டத்திருத்த மசோதா -ஜேபி நட்டா

” வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா நாட்டின் நலனுக்காக மட்டுமே கொண்டு வரப்படுகிறது. எந்த கட்சியின் நலனுக்காகவும் கொண்டு வரப்படவில்லை,” என மத்திய அமைச்சர் ஜேபி நட்டா பேசினார்.

வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நேற்று லோக்சபாவில் நிறைவேறியது. இம்மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது.

இம்மசோதா மீதான விவாதத்தில் மத்திய அமைச்சர் நட்டா பேசியதாவது: நாட்டின் நலனுக்காகவே வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. 25 மாநில வக்ப் வாரியங்களுடன் கலந்து ஆலோசித்தோம். பார்லிமென்ட் கூட்டுக்குழுவினர் நாட்டின் 25 முக்கிய நகரங்களுக்கு சென்று கருத்துக்களை பெற்றனர்.

ஆனால், மசோதா மீதான விவாதத்தில் இருந்து திசைதிருப்ப எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. அவர்களிடம் விவாதிப்பதற்கு என உண்மையான எந்த விஷயமும் இல்லை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வக்ப் சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்ட போது அமைக்கப்பட்ட கூட்டுக்குழுவில் 13 பேர் மட்டுமே இருந்தனர். தற்போது 31 பேர் உள்ளனர்.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, 2013ல் கொண்டு வரப்பட்ட வக்ப் குறித்த மசோதா, 2014ல் உங்களை காப்பாற்றவில்லை. எதிர்க்கட்சிகள் இம்மசோதா குறித்து பொய்த் தகவலை பரப்புகின்றன. இது நிராகரிக்கப்பட வேண்டும். இம்மசோதா விவகாரத்தில் ஜனநாயக முறைகளை மோடி அரசு பின்பற்றுகிறது.

திட்டங்களை அமல்படுத்தும்போது, மக்களின் நலனுக்கு தான் பிரதமர் மோடி முன்னுரிமை அளித்து வருகிறார். தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்களை சேர்க்காமல் 70 ஆண்டுகள் வைத்து இருந்தது யார்? முத்தலாக் முறையை நிறுத்த பிரதமர் மோடிக்காக முஸ்லிம் பெண்கள் காத்து இருந்தனர். இந்த முறையை பலநாடுகள் நிறுத்திவிட்டன. எந்த கட்சியின் நலனுக்காகவும், யாரை திருப்திப்படுத்தவும் இம்மசோதா கொண்டு வரப்படவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேஷியா வக்ப் வாரியத்தை சீரமைத்து உள்ளது. சவுதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளும் வக்ப் வாரியத்தை சீரமைத்து உள்ளன. இந்தியாவும் ஏன் சீரமைக்கக்கூடாது. வக்ப் வாரியங்கள் முறையாக நிர்வகிக்கப்படக்கூடாதா? இவ்வாறு நட்டா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டின் பாரம்பரியத்தை பிரதிப ...

நாட்டின்  பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சேனல் தூர்தர்ஷன் – மத்திய இணை அமைச்சர் ''நாட்டின் பொருளாதாரத்தில், படைப்பு பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது,'' என, ...

போதை பொருள் விற்பனையில் தமிழகம ...

போதை பொருள் விற்பனையில்  தமிழகம் முதலிடம் – எ ச் ராஜா தமிழகத்தில் அதிக அளவில் போதைப்பொருள் விற்பனையாகிறது. கஞ்சா மூடைகள் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன்ட்ரோல் – நயினார் நாகேந்திரன் ''2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தமிழகத்தில் இருந்து அவுட் ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமு ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமுக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுத்தமான குடிநீரைக் கூட வழங்க ...

திமுக ஆட்சிக்கு பூட்டு போட வேண் ...

திமுக ஆட்சிக்கு பூட்டு போட வேண்டும்  – பாஜக மாநில தலைவர் ''அ.தி.மு.க., -பா.ஜ., கூட்டணி உறுதியான கூட்டணி; இறுதியான கூட்டணி'' ...

”தமிழக அரசு எனது போனை ஒட்டு கே ...

”தமிழக அரசு எனது போனை ஒட்டு கேட்கிறது”- மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ''தமிழக அரசு எனது போனை ஒட்டு கேட்கிறது'' என்று ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...