சைபர் குற்றங்களை தடுத்திட 5 ஆயிரம் சைபர் கமாண்டோக்களை உருவாக்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார்.
இந்திய சைபர் குற்றத்தடுப்பு ஒருங்கிணைப்பு மைய தின விழா டில்லி விஞ்ஞான் பவனில் நடந்தது. இதில் கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது,
அதிகரித்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு பல அச்சுறுத்தல்களை உருவாக்கி வருகிறது. அதனால்தான் இணையபாதுகாப்பு என்பது டிஜிட்டல் உலகத்துடன் மட்டுப்படுத்தப்படாமல், தேசிய பாதுகாப்பின் முக்கிய அம்சமாகவும் மாறியுள்ளது.
பிரதமர் மோடியின் தொலைநோக்குப்பார்வையுடன் சைபர் மோசடி தடுப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் “இந்தியாவில் சைபர் குற்றங்களைத் தடுக்கும் வகையில், 5 ஆண்டுகளில் 5,000 சைபர் கமாண்டோக்களை உருவாக்கஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது .சைபர் பாதுகாப்பை உறுதி செய்யமால் நாட்டில் முன்னேற்றமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக முக்கிய வங்கிகள், நிதி நிறுவனங்கள், தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், சட்ட அமலாக்க முகமைகள் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள்அடங்கிய சைபர் மோசடி தடுப்பு மையத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி ‘சைபர்கமாண்டோக்கள்’ திட்டத்தையும், துவக்கி வைத்தார்.
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |