நவீன கால போர்களுக்கு தயாராக இருக்க வேண்டும் -ராஜ் நாத் சிங்

 ‘பாரம்பரிய போர் முறைகளுக்கு பதிலாக, சைபர், விண்வெளி மற்றும் பொருளாதாரம் மற்றும் தகவல்கள் வாயிலாக தற்கால போர் நடக்கிறது. இப்படி புதிய களத்தில் நடக்கும் போர் பாரம்பரிய போர் முறைகளை விஞ்சிவிட்டது’ என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், பாரம்பரிய போர் முறை மற்றும் தற்காலிக போர் முறை குறித்து, ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

சர்வதேச புவி அரசியல் சூழல்களில் ஏற்படும் மாற்றங்களால் எதிர்காலத்தில் ஏற்பட உள்ள சிக்கல்கள் குறித்து ராணுவ அதிகாரிகள் சிந்திக்க வேண்டும். சர்வதேச உறவுகளில் எடுக்கப்படும் முடிவுகளை அதிகாரிகள் கூர்ந்து கவனிக்க வேண்டும். போர்க்களத்தை தாண்டி அதன் தாக்கம் தூதரக, பொருளாதார உறவுகளில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

ஏ.ஐ., மற்றும் ட்ரோன் உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியான நவீனகால போர் முறைகளை எதிர்கொள்ள ராணுவ அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும். பாரம்பரிய போர் முறைகளுக்கு பதிலாக, சைபர், விண்வெளி மற்றும் பொருளாதாரம் மற்றும் தகவல்கள் வாயிலாக தற்கால போர் நடக்கிறது. இத்தகைய போர், பாரம்பரிய போர் முறைகளை விஞ்சிவிட்டது.

இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வழிகளை அதிகாரிகள் கண்டறிந்து செயல்பட வேண்டும். இது தொடர்புடைய படிப்புகளை தேசிய பாதுகாப்பு கல்லூரி தங்கள் பாடத்திட்டத்தில் இணைத்து பயற்சி அளிப்பது அவசியமாகும். இந்த பயிற்சி பிராந்திய பாதுகாப்பு மற்றும் வளமையை மேம்படுத்த உதவும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருக ...

ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகிறார் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் தொடங்கிய பின், ...

ஜி -20 மாநாட்டில் பசி மற்றும் வறு ...

ஜி -20 மாநாட்டில் பசி மற்றும் வறுமைக்கு எதிரான தலைப்பில் பிரதமர் மோடி ஆற்றிய உரை பிரேசிலில் நடக்கும் 'ஜி - 20' உச்சி மாநாட்டில், ...

அரசு முறைப்பயணமாக நைஜீரியா சென ...

அரசு முறைப்பயணமாக நைஜீரியா சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு அரசு முறை பயணமாக நைஜீரியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, ...

பிரதமர் மோடிக்கு உயரிய விருதுக ...

பிரதமர் மோடிக்கு உயரிய விருதுகளில் ஒன்றான Gcon விருது நைஜீரியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “Gcon” விருது பிரதமர் ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...