உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக பொறுப்பேற்றுள்ள அந்நாட்டின் தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்டை சந்தித்துப் பேசினார்.

ஐரோப்பிய நாடான பிரான்சுக்கு மூன்று நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து புறப்பட்டு இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 4:00 மணிக்கு வாஷிங்டன் சென்றடைந்தார்.

வெள்ளை மாளிகை அருகே உள்ள அதிபரின் விருந்தினர் மாளிகையான, ‘பிளேர் ஹவுஸ்’ல் பிரதமர் தங்கியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை இன்று அதிகாலை சந்தித்து பேச உள்ளார்.

முன்னதாக, அமெரிக்க தேசிய உளவுத்துறையின் இயக்குனராக பொறுப்பேற்றுள்ள ஹிந்து – அமெரிக்கரான துளசி கப்பார்டை பிரதமர் நேற்று சந்தித்துப் பேசினார்.

அதன் பின் தன் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்காவின் புலனாய்வுத்துறையில் மிக உயர்ந்த பதவியை பெற்றுள்ள துளசிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன். இந்தியா – அமெரிக்கா நட்புறவின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தோம்.

அதை மேலும் வலுப்படுத்துவதில் துளசி மிகவும் தீவிரமாக உள்ளார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.இந்த சந்திப்பு குறித்து நம் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பிரதமர் மோடி – துளசி கப்பார்ட் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. பயங்கரவாத எதிர்ப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களில் உளவுத்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...