பிரதமர் மோடி பிறந்தநாளை தர்காவில் முன்னிட்டு 4,000 எடை கொண்ட விருந்து ஏற்பாடு

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அஜ்மீர் ஷெரீப் தர்காவில் 4,000 கிலோ எடையுள்ள சைவ சமபந்தி விருந்து, பக்தர்களுக்கு வழங்கப்படும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அஜ்மீர் ஷெரீப் தர்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், “செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு அஜ்மீர்ஷெரீப் தர்காவில் 4,000 கிலோ சைவ சமபந்தி விருந்து பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளதர்கா நிர்வாகி சையத் அஃப்ஷான் சிஷ்டி, “பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, 4,000 கிலோ சைவ உணவுகளை தயார் செய்வோம். அரிசி, நெய், உலர் பழங்கள் உள்ளிட்டவை கொண்டுசுத்தமான சைவ உணவுகள் தயாரிக்கப்படும். பின்னர் சமபந்தி விருந்து மூலம் சுற்றியுள்ள மக்களுக்கு வழங்கப்படும். இந்திய சிறுபான்மை அறக்கட்டளை மற்றும் அஜ்மீர் ஷெரீப்பின் சிஷ்டிஅறக்கட்டளை மூலம் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பிரதமர் மோடியின் பிறந்தநாளில் அவர் நீண்டஆயுளுடன் வாழவும், நாட்டின் அமைதி, ஒற்றுமை, செழிப்பு மற்றும் நல்வாழ்வுக்காகவும் சிறப்புபிரார்த்தனைகள் (துவா) செய்வோம். அன்றைய தினம், விளக்கேற்றுவது முதல் உணவுவிநியோகம் வரை அனைத்தும் மிகுந்த பக்தியுடனும் அக்கறையுடனும் நடத்தப்படும்.

தர்காவில் டெக் எனப்படும் உலகின் மிகப்பெரிய சமையல் பாத்திரங்களில் ஒன்று உள்ளது. இது, 4,000 கிலோ வரை உணவு தயாரிக்கும் திறன் கொண்டது. இந்தபாத்திரத்தைக் கொண்டு நாங்கள் விருந்து தயாரிப்போம். அன்றைய தினம் இரவு முழுவதும் பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கூடி, குர்ஆன் வசனங்கள் மற்றும் பக்திப் பாடல்களை ஓதுவார்கள். நாட்டின்நலனுக்காகவும், மனிதகுலத்தின் நலனுக்காகவும் மேற்கொள்ளப்படும் ஒற்றுமை பிரார்த்தனைகளுடன் இந்நிகழ்வு நிறைவடையும்” என்று தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய இளைஞர ...

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய இளைஞர்கள் இழந்த மரியாதையை பெற்றுள்ளனர் – ஜிதேந்திர சிங் கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் ...

பிரிக்ஸ் உச்சி மாநாடு -மோடி ரஷ் ...

பிரிக்ஸ் உச்சி மாநாடு -மோடி ரஷ்யா செல்கிறார் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, அதிபர் புடின் ...

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர ...

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் சண்டிகரில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர்கள் மற்றும் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.