நமது இலக்கு மிகப்பெரிய இலக்கு. நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் -அண்ணாமலை அறிவுரை

‘நமது இலக்கு மிகப்பெரிய இலக்கு. நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கட்சியினருக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பை படிப்பதற்காக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ளார். அங்கு இருந்து அவர் பா.ஜ.,வினருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:அன்பு தலைவர்களே, தொண்டர்களே உங்கள் தலைவர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். நிச்சயமாக நீங்கள் அனைவரும் நன்றாக இருப்பீர்கள் என நான் நம்புகிறேன். கட்சி பணிகளும் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.

அருமை சொந்தங்களே கடந்த சில நாட்களாக பா.ஜ., நிர்வாகிகள் மிகக் கடுமையாக களத்தில் உழைத்து கொண்டிருக்கிறீர்கள். பா.ஜ.,வில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக, புதியவர்களை நம்மோடு இணைப்பதற்காக, நம்முடைய குடும்பத்தை இன்னும் வேகப்படுத்துவதற்காக உழைத்து கொண்டிருக்கிறீர்கள். இந்த நேரத்தில் உங்களிடம் நான் வைக்கக்கூடிய கோரிக்கை, நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். ஏனென்றால் நமது இலக்கு மிகப்பெரிய இலக்கு. தமிழகத்தில் பா.ஜ.,வின் வளர்ச்சியை அனைவரும் பார்த்து கொாண்டிருக்கிறார்கள். மக்களின் அன்பு பா.ஜ.,வின் பக்கம் வர துவங்கியிருக்கிறது.

நிறைய மனிதர்கள் நம்முடன் இணைய வேண்டும். அன்பு சொந்தங்கள் நம்முடன் இணைய வேண்டும். இந்த நேரத்தில் நம்முடைய இலக்கை மிகத் தெளிவாக வைத்திருக்க வேண்டும். ஒரு பூத்தில் குறைந்தபட்சம் 200 பேரை கட்சியில் சேர்க்க வேண்டும். இது பெரிய இலக்காக இருந்தாலும், நிச்சயம் இது நம்மால் செய்து காட்டக்கூடிய இலக்கு தான். நம்மளால் நிச்சயமாக செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு, நமது கட்சி தலைமை நமக்கு அளித்துள்ள இலக்கு. ஒரு நாளில் மண்டல அளவில் 500 பேர் பா.ஜ.,வில் இணைந்தால் மட்டும்தான் குறிப்பிட்ட காலத்தில் நம் இலக்கை எட்ட முடியும். நாங்கள் உங்களுடன் வைக்க கூடிய அன்பான வேண்டுகோள்.

தினமும் கட்சியில் இணையும் புதியவர்களுக்கு நேரம் ஒதுக்குங்கள். இலவச செல்போன் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வையுங்கள். தினமும் கூட அவர்கள் பதிவேற்றம் செய்யும் போது அவர்களுக்கு உதவி செய்யுங்கள். நீங்கள் களத்தில் இருந்து புதியவர்களுக்கு உதவி செய்யுங்கள்.ஒவ்வொரு நாளும் நமக்கு மிக முக்கியம். புதியவர்களை கட்சியில் இணைப்பது தான் மிக முக்கியமான பணி. இந்திய அளவில் அதிகளவிலான உறுப்பினர்கள் தமிழக பா.ஜ.,வில் இருக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். எல்லாரும் ஒன்றாக இணைந்து கைகோர்த்து செயல்பட வேண்டும். நீங்கள் இதை செய்து முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் செய்து காட்ட வேண்டும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

”உலகின் எந்த மூலையில் இருந்தா ...

”உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்” – பிரதமர் மோடி ''உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவோம்'' என ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர் ...

பயங்கரவாததாக்குதல் உலக தலைவர்கள் கண்டனம் கவலை அளிக்கிறது! காஷ்மீரில் இருந்து வரும் செய்தி கவலை அளிக்கிறது. ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அ ...

பிரதமர் மோடிக்கு ஆறுதல் சொன்ன அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு ...

துவங்கியது பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை; பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை சவுதி அரேபியாவில் இருந்து நேற்று டில்லி திரும்பிய பிரதமர் ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு & ...

பாகிஸ்தானுடன் உறவு துண்டிப்பு – தாக்குதலுக்கு தயாராகிறது இந்தியா பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாக்., உறவை துண்டித்துக் ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவ ...

பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவில் பதிலடி – ராஜ்நாத் சிங் ஜம்மு - -காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...