பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம்

”பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு தகர்த்துள்ளது,” என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பான, ‘பிக்கி’ சார்பில், ‘அதிகாரம், அரசியல் உள்ளிட்டவற்றில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத தடைகளை உடைத்து, வளர்ச்சி அடையும் பெண்கள்’ என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில், கல்வி, பொருளாதாரம், உள்கட்டமைப்புகள், தொழில்நுட்பம் என, அனைத்து துறைகளிலும், இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாக நம் நாடு அடைந்துள்ள வளர்ச்சி, உலக நாடுகளை பிரமிக்க வைத்துள்ளது.

பெண்கள் முன்னேற்றம் அடையாமல், அவர்களுக்கு சம வாய்ப்பு வழங்காமல், நாட்டின் வளர்ச்சி முழுமை பெறாது. அதை உணர்ந்து, பிரதமராக மோடி பதவியேற்றது முதல், பெண்கள் நலனை மையப்படுத்தி, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெண்கள் வீட்டு வேலைகளிலேயே முடங்கி விடக்கூடாது என்பதற்காகவே, 12 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு; 10 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு; 17 கோடி பெண்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் சொந்தக்காலில் நிற்க, அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் வேண்டும். அதற்கு அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். பெண்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும்.

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, போலீஸ் நிலையங்களில் மூன்று பெண் எஸ்.ஐ.,க்கள், 10 பெண் காவலர்கள் இருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு விரைந்து தண்டனை வழங்கவும், 866 விரைவு நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. அவற்றில், 410 நீதிமன்றங்கள் போக்சோ வழக்குகளை கையாளும் சிறப்பு நீதிமன்றங்கள். இதனால், 2.53 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், பிக்கி பெண்கள் பிரிவு தலைவர் திவ்யா அபிஷேக், நிர்வாகி சுதா சிவகுமார் ஆகியோர், பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.அதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், ”அரசியல்வாதிகள் எதை செய்தாலும் விளம்பரத்திற்காக செய்வதாக சொல்லி விடுவர். எனக்கு சமைப்பது, வீட்டுக்கு தேவையான காய்கறிகளை நேரில் சென்று வாங்குவது பிடிக்கும். அப்படி, சென்னையில் காய்கறிகள் வாங்கியதும் விமர்சனத்திற்கு உள்ளானது,” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய அரசும் மாநில அரசும் இணக் ...

மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக இறுக்க வேண்டும்- அரசியல் பேசும் ஆதினம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு ...

மஹாராஷ்டிரா முதல்வராக தேவேந்த ...

மஹாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னவிஸ் மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். ஏக்நாத் ...

சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ் ...

சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே சாலைப்பணிகல் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே சாலையில் கர்நாடகாவிற்குள் அனைத்து ...

பேரிடர் நிவாரண நிதியை எப்போது த ...

பேரிடர் நிவாரண நிதியை எப்போது தருவீர்கள் என்ற MP கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் 'நிவாரணம் கிடையாது' என ராஜ்யசபாவில் மத்திய அரசு பதில் ...

நெத்தன்யாகுவுக்கு பிடிவாரண்ட் ...

நெத்தன்யாகுவுக்கு பிடிவாரண்ட் – ஜெய் சங்கர் விளக்கம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிரான பிடிவாரண்ட் குறித்து ...

இந்தியாவில் முதலீடு செய்வது லா ...

இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது – புதின் மாஸ்கோரஷ்யாவின் மாஸ்கோவில் நேற்று நடந்த முதலீட்டு அமைப்பின் கூட்டத்தில், ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...