” காங்கிரஸ் ஒரு ஏமாற்றுக் கட்சி. அதனை பாகிஸ்தான் அரசு ஆதரித்து வருகிறது,” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஹரியானாவின் பல்வால் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: ‘நகர்ப்புற நக்சலிசம்’ தான் காங்கிரசின் ஒரே திட்டம். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் என அக்கட்சி சொல்கிறது. ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரை மீட்பது குறித்து அக்கட்சி எதுவும் சொல்லவில்லை.
இது அக்கட்சியின் வாயில் இருந்து வராது. காஷ்மீரை கூறுபோட்டது காங்கிரஸ் கட்சி தான். இக்கட்சியை தான் பாகிஸ்தான் அரசு ஆதரித்து வருகிறது. மிகவும் ஏமாற்றுக்கட்சி என்றால் அது காங்கிரஸ் தான்.
இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் முயற்சி செய்கிறது. அதற்கு ஒரு சோதனை களமாக ஹரியானாவை பயன்படுத்த அக்கட்சி திட்டமிடுகிறது. மோடியும், பா.ஜ.,வும் இருக்கும் வரை அது நிறைவேறாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |