”அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தை மறைக்க, முதல்வர் ஸ்டாலின், கவர்னரை பயன்படுத்துகிறார். தி.மு.க.,வினர், கவர்னரை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர்,” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
சென்னையில் நடந்து வரும் புத்தகக் காட்சிக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நேற்று மதியம் வந்தார். அங்கு 400க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகளைப் பார்வையிட்டு, சில புத்தகங்களை வாங்கினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும். கடந்த முறை, தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படவில்லை. எனவே, இம்முறை சிறப்புக் கவனம் செலுத்தி, கடிவாளம் அமைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அண்ணா பல்கலையில் மாணவிக்கு அளிக்கப்பட்ட பாலியல் தொல்லை விவகாரத்தில் தமிழக பா.ஜ., மகளிர் அணியினர், பா.ம.க.,வினர், அ.தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தியபோது, காவல் துறை வலுக்கட்டாயமாக அவர்களை கைது செய்தது.
ஆனால், உப்புச் சப்பில்லாத கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விஷயத்தில், தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. அந்த ஆர்ப்பாட்டத்துக்கு மட்டும் எப்படி அனுமதி கொடுத்தனர்? அண்ணா பல்கலை பிரச்னையை திசை திருப்பவே இந்தப் போராட்டம் நடந்துள்ளது.
தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடப்பில் உள்ளது. கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. ஆளும் கட்சிக்கு ஒரு நீதி; எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என, அம்பேத்கர் சட்டம் இயற்றவில்லை. கவர்னரை ஆபாசமாக சித்தரித்து, தி.மு.க.,வினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதை காவல் துறை வேடிக்கை பார்க்கிறது.
எங்களாலும் முதல்வர் ஸ்டாலினை ஆபாசமாக சித்தரித்து போஸ்டர் ஒட்ட முடியும். ஆனால், அந்தப் பதவிக்கென ஒரு மரியாதை உள்ளதால் அமைதி காக்கிறோம்; தவிர்க்கிறோம்.
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கவில்லை என மத்திய அரசு தெளிவாகக் கூறிவிட்டது. இதை தமிழக முதல்வர் வாய் திறந்து சொல்ல மறுப்பது ஏன்? முதல்வரோ, துணை முதல்வரோ, கனிமொழியோ ஏன் மதுரை செல்லவில்லை.
தன் பிறந்தநாள் கொண்டாட்ட போஸ்டர்களால் கனிமொழிக்கு கடும் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக அறிகிறேன். அதை மறைக்க, கவர்னர் விவகாரத்தை பயன்படுத்திக் கொள்கிறார். அதற்காகவே, தான் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் தாறுமாறாக கவர்னரை விமர்சித்து பேசியுள்ளார்.
அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தை மறைக்க, முதல்வர் ஸ்டாலின், கவர்னரை பயன்படுத்துகிறார். தி.மு.க.,வினர், கவர்னரை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |