மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி

”மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,” என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

தமிழக கவர்னர் ரவியை திரும்ப பெற வேண்டும் என, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியது, மக்களை திசை திருப்பும் செயல். ஹிந்தி மாதம் என்பது மத்திய அரசின் அனைத்து துறைகளிலும், ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிப்பது வாடிக்கை.

தி.மு.க., – காங்., கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும், ஹிந்தி வாரம் கடைபிடிக்கப்பட்டது. மத்திய அமைச்சர்களாக, தி.மு.க.,வினர் இருந்த துறைகளிலும் அதை முழுமையாக கடைபிடித்தனர்.

தமிழ் மொழியை பாதுகாப்பதிலும், உலகளவில் எடுத்து செல்வதிலும் முதன்மையாக இருப்பவர் பிரதமர் மோடி. தேர்தல் வாக்குறுதியில் கூறியதை போல திருவள்ளுவருக்கு கலாசார மையம் ஏற்படுத்தி இருக்கிறோம். இப்படித்தான் தமிழ் மொழியை உலக அளவில் போற்றுதலுக்குரிய மொழியாக ஆக்கி இருக்கிறோம்.

சென்னை துார்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடந்த ஹிந்தி மாத நிறைவு நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது, திராவிட நல் திருநாடு என்ற வாக்கியம் விடுபட்டுள்ளது. அந்தத் தவறு யார் செய்தது என்பது எல்லாருக்கும் தெரியும். அந்த தவறுக்கு, சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பும் கேட்டுவிட்டனர். அப்படி இருக்கும்போது, அந்த செயலுக்கு கவர்னரை தொடர்புபடுத்துவது நியாயமான விஷயம் இல்லை. குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியில், கவர்னர் சிறப்பு விருந்தினராகவே கலந்து கொண்டார். அப்படி இருக்கும்போது, அவரை எப்படி நடந்த சிறு தவறுக்கு பொறுப்பாக்க முடியும்?

தமிழகத்தின் சமீபத்திய மழை வெள்ளத்தை, தி.மு.க., அரசு சரியாக கையாளவில்லை. அதை திசை திருப்பும் நோக்கிலேயே, தூர்தர்ஷனில் நடந்த ஒரு விவகாரத்தை அரசியலாக்குகின்றனர். இது 1967ம் ஆண்டு கிடையாது. தற்போது மக்கள் தெளிவாக உள்ளனர். நாம் யாரும் ஹிந்திக்கு ஆதரவாளர்கள் கிடையாது; அதேசமயம் எதிர்ப்பாளர்களும் கிடையாது.

தி.மு.க., நிர்வாகிகள் நடத்தும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஹிந்தியை பாடமாக வைக்க மாட்டோம் என சொல்லி விட்டு ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிப்பரா? அதற்கு அவர்கள் முன் வர மாட்டார்கள். அவர்களுக்கு, அதில் வருமானம் கிடைக்கிறது. மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனிமேல் நடக்காது; அது எடுபடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...