கிராமப்புற இந்தியாவில் 95% நிலப்பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன

நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல், நில உரிமையின் நிர்வாகத்தை நவீனமயமாக்குதல் ஆகியவற்றுடன் கிராமப்புற இந்தியா குறிப்பிடத்தக்க மாற்றத்தை சந்தித்து வருகிறது. இந்த முன்முயற்சி நில நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் செயல்திறனையும் மேம்படுத்தி, லட்சக்கணக்கான கிராமப்புற குடும்பங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. சிக்கலான ஆவணங்கள் மற்றும் உரிமைத் தகராறுகள் தொடர்பான நீண்டகால சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த மாற்றத்தின் முக்கியத்துவத்தை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ்  சிங் சவுகான் சமீபத்தில் எடுத்துரைத்தார். 2016-க்குப் பின்  கிராமப்புற இந்தியாவில் சுமார் 95% நிலப் பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இது கிராமப்புறங்களில் பாதுகாப்பான, எளிதில் அணுகக்கூடிய நில உரிமையை உறுதி செய்வதற்கான முக்கிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்று அவர் கூறினார்.

இந்தியாவில் நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவது தகராறுகள், மோசடி மற்றும் திறமையற்ற கையேடு செயல்முறைகள் போன்ற பாரம்பரிய சவால்களை எதிர்கொள்வதன் மூலம் நில நிர்வாகத்தை மாற்றியமைத்துள்ளது. இப்போது, உரிமையாளர்கள்  தகவல்களை ஆன்லைனில் எளிதாக அணுகலாம், இது வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துகிறது; சட்டவிரோத ஆக்கிரமிப்புகளைக் குறைக்கிறது. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பதிவுகள் தகராறு தீர்வைஎளிதாக்குகின்றன.  நீதிமன்ற சுமைகளை குறைக்கின்றன.  நில உரிமைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதன் மூலம் விளிம்புநிலை சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கின்றன. புவிசார் வரைபடத்துடன்  ஒருங்கிணைப்பது நில நிர்வாகத்தை மேம்படுத்துகிறது, துல்லியமான ஆய்வுகள் மற்றும் திட்டமிடலை செயல்படுத்துகிறது. நிலம் கையகப்படுத்துதல் அல்லது பேரழிவுகளின் போது, டிஜிட்டல் பதிவுகள் நியாயமான மற்றும் சரியான நேரத்தில் இழப்பீட்டை உறுதி செய்கின்றன. ஒட்டுமொத்தமாக, இந்த மாற்றம் இந்தியாவில் மிகவும் வெளிப்படையான, எளிதில்  அணுகக்கூடிய, திறமையான நில நிர்வாக முறைக்கு வழி வகுத்துள்ளது.

டிஜிட்டல் இந்தியா நில பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டம், முன்பு தேசிய நிலப் பதிவு நவீனமயமாக்கல் திட்டம் என்று அழைக்கப்பட்டது, ஏப்ரல் 2016-ல் மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் மத்திய துறை திட்டமாக மறுசீரமைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த நில தகவல் மேலாண்மை அமைப்பை உருவாக்குவதன் மூலம் நவீன மற்றும் வெளிப்படையான நில பதிவு மேலாண்மை அமைப்பை நிறுவுவதே இதன் முக்கிய குறிக்கோள். இந்த அமைப்பு நிகழ்நேர நிலத் தகவல்களை வழங்குதல், நிலப்  பயன்பாட்டை மேம்படுத்துதல், நில உரிமையாளர்கள் மற்றும்  வாங்குபவர்களுக்கு பயனளித்தல், கொள்கை வகுப்பதை ஆதரித்தல், நில தகராறுகளைக் குறைத்தல், மோசடி பரிவர்த்தனைகளைத் தடுத்தல், அலுவலகங்களுக்கு நேரடி வருகைகளை அகற்றுதல் மற்றும் பல்வேறு நிறுவனங்களுடன் தரவு பகிர்வை  நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாவட்ட ஊரக ஆதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 6.26 லட்சம் கிராமங்களை உள்ளடக்கிய 95% நிலப் பதிவுகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன.  வரைபடங்களின் டிஜிட்டல் மயமாக்கல் தேசிய அளவில் 68.02%=ஐ எட்டியுள்ளது. 87% துணைப் பதிவாளர் அலுவலகங்கள்  நிலப் பதிவுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.  டிஜிட்டல் இந்தியா நில பதிவுகள் நவீனமயமாக்கல் திட்டத்தை  202526 வரை அரசு நீட்டித்து, நிலப் பதிவுகளுடன் ஆதார் அடிப்படையிலான ஒருங்கிணைப்பு மற்றும் வருவாய் நீதிமன்றங்களை கணினிமயமாக்குதல் போன்ற புதிய அம்சங்களைச் சேர்த்தது.

நிலப் பதிவுகளை அணுகுவதில் மொழி தடைகளை சமாளிக்க, இந்திய அரசியலமைப்பின் அட்டவணை 8-ல் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் நில ஆவணங்களை ஒலிபெயர்ப்பு செய்யப்படுகிறது.  இது ஏற்கனவே 17 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் பயன்பாட்டில் உள்ளது.

பூமி சம்மான் முன்முயற்சியின் கீழ், 16 மாநிலங்களில் உள்ள 168 மாவட்டங்கள், நில பதிவேடுகளை கணினிமயமாக்குதல் மற்றும் வரைபட டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட திட்டத்தின் முக்கிய கூறுகளில் 99% க்கும் அதிகமாக நிறைவு செய்ததற்காக “பவளத் தரவரிசை”யை எட்டியுள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

முதல்வர் மருந்தகம் இல்ல… ‘ம ...

முதல்வர் மருந்தகம் இல்ல… ‘முதல்வர் மாவகம்’ ; அண்ணாமலை விமர்சனம் முதல்வர் மருந்தகங்களில் மாவு விற்கப்படும் நிலையில், இதற்குப் பேசாமல், ...

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை த ...

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர்; அண்ணாமலை குற்றச்சாட்டு அவசர அவசரமாக பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை முதல்வர் ...

விரத மாலை அணிந்தார் நயினார் நாக ...

விரத மாலை அணிந்தார் நயினார் நாகேந்திரன் மதுரையில் நாளை மறுநாள் நடக்கும் முருகன் மாநாடு சிறப்பாக ...

காவல்துறையினர் பதவி உயர்விலும ...

காவல்துறையினர் பதவி உயர்விலும் ஏமாற்று வித்தை: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம் திமுகவின் ஏமாற்று வித்தை, காவல்துறையினர் பதவி உயர்விலும் தொடர்வதாக ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்ச ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி -பிரதமர் மோடி சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுப் பொருட்கள் ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கனடா, பிரான்ஸ், ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...