‘டிஜிட்டல் உலகத்தில், மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்க அவசியம் உள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
டில்லியில் நடந்த விழாவில், ஜெய்சங்கர் பேசியதாவது: உலக அளவில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீங்கள் யாருடைய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நம்புகிறீர்கள், உங்கள் தரவு எங்கே இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? உங்கள் தரவை உங்களுக்கு எதிராக மற்றவர்கள் எங்கே பயன்படுத்துவார்கள்? இவை அனைத்தும் கண்காணிப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். டிஜிட்டல் உலகத்தில், மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்க அவசியம் உள்ளது.
இன்று, இந்தியா அதிக எதிர்பார்ப்புகள் உள்ள நாடாக உள்ளது, அதிக பொறுப்புகள் உள்ள நாடாக உள்ளது. முதல் பதிலளிப்பவராக இந்தியா என்ற எண்ணம் அடிக்கடி எழும். அண்டை நல்லுறவு உடன், இந்தியா சர்வதேசத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். புவிசார் அரசியலில் இந்தியாவின் பொறுப்புகள் வளர்ந்து வருகிறது. தேவைப்படும் நேரத்தில் இந்தியா தரப்பில் இருந்து முதலில் பதில் அளிக்கப்படும். புதிய யோசனைகள் உள்ளிட்டவற்றை தெரிவிப்போம். இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |